காத்தான்குடி நகரத்தை இன்னும் அபிவிருத்தி செய்ய வேண்டும் : ஹிஸ்புல்லா எம்.பி

Batticaloa Parliament of Sri Lanka Sri Lankan Peoples M.L.A.M. Hizbullah
By Rakshana MA Apr 19, 2025 09:24 AM GMT
Rakshana MA

Rakshana MA

காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் அல்-அக்ஸா வட்டார வேட்பாளர் எம்.ஜே.எம்.ஜவாஹிரை (JP) ஆதரித்து தேர்தல் பிரச்சார காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வும் மக்கள் சந்திப்பும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்வானது, நேற்று (18) ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தலைமையில் நடைபெற்றுள்ளது.

இதன்போது அவர் உரையாற்றுகையில்,

காத்தான்குடி நகரத்தை இன்னும் அபிவிருத்தி செய்து கட்டியொழுப்பவேண்டிய தேவையிருக்கிறது. மக்களின் தேவைகள் நிறைவு செய்யப்படவேண்டும். அதற்காக எம்மால் முடிந்த அனைத்தையும் செய்துகொண்டிருக்கிறோம்.

மட்டக்களப்பில் திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

மட்டக்களப்பில் திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

காத்தான்குடி நகரம்

அதேபோல் இன்னும் பல சிறந்த செயற்திட்டங்களை மேற்கொள்ள தயாராக இருக்கிறோம். அதற்காக உங்கள் முழுமையான ஒத்துழைப்பு மற்றும் நகர சபையின் அதிகாரம் தேவைப்படுகிறது.

காத்தான்குடி நகரத்தை இன்னும் அபிவிருத்தி செய்ய வேண்டும் : ஹிஸ்புல்லா எம்.பி | Hizbullah Mp Speech At Kattankudy

இதற்காக, பத்து வட்டாரங்களையும் வென்று போதாது ஏனைய சில கட்சிகளையும் இணைத்து செயற்பட தயாராக இருக்கிறோம் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிகழ்வில் கட்சியின் உயர்பீட உறுப்பினர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், காத்தான்குடி நகர சபை வேட்பாளர்கள், கட்சியின் மத்திய முழு உறுப்பினர்கள், ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர். 

அச்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்தாரா அநுர..! கேள்வி எழுப்பும் சாணக்கியன்

அச்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்தாரா அநுர..! கேள்வி எழுப்பும் சாணக்கியன்

போர் நிறுத்தத்தை நிராகரிக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் தீவிரமடையும் நிலவரம்

போர் நிறுத்தத்தை நிராகரிக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் தீவிரமடையும் நிலவரம்

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW