ஈரானுக்கு எதிராக இருபது மடங்கு தாக்குதல்! அமெரிக்காவின் அதி உச்ச எச்சரிக்கை

By Fathima Mar 10, 2026 08:37 AM GMT
Fathima

Fathima

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் போக்குவரத்தை ஈரான் தடுக்க முயன்றால் அதற்கு கடுமையான பதில் அளிப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து தனது truthsocial தளத்தில் ட்ரம்ப் வெளியிட்ட அறிக்கையில்,

“ஹோர்முஸ் நீரிணையின்  எண்ணெய் ஓட்டத்தை ஈரான் தடுக்க ஏதேனும் நடவடிக்கை எடுத்தால், இதுவரை அவர்கள் சந்தித்த தாக்குதல்களை விட இருபது மடங்கு கடுமையாக அமெரிக்கா பதிலடி கொடுக்கும்” என தெரிவித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணை

மேலும், “ஈரான் நாட்டின் முக்கியமான மற்றும் எளிதில் அழிக்கக்கூடிய இலக்குகளை தாக்கி, அந்த நாடு மீண்டும் ஒரு நாட்டாக கட்டமைக்க முடியாத நிலைக்கு கொண்டு செல்ல முடியும்” என்றும் அவர் எச்சரித்தார்.

அதே நேரத்தில், இந்த நிலைமை ஏற்படாது என தாம் நம்புகிறோம் என்றும் அவர் கூறினார்.

ஹோர்முஸ் நீரிணை வழியாக செல்லும் எண்ணெய் போக்குவரத்து பல நாடுகளுக்கு, குறிப்பாக சீனா போன்ற நாடுகளுக்கு முக்கியமானது என்றும், அந்த பாதையை பாதுகாப்பது உலக பொருளாதாரத்திற்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஹோர்முஸ் நீரிணை உலகின் முக்கியமான எண்ணெய் போக்குவரத்து பாதைகளில் ஒன்றாகும்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து உலகின் பல பகுதிகளுக்கு எண்ணெய் செல்லும் முக்கிய வழி இதுவாகும்.

ட்ரம்பின் இந்த கடுமையான எச்சரிக்கை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரிக்கக்கூடும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.