ஈரானிய கடற்படையினரின் சடலங்கள் தொடர்பில் இலங்கை நீதவான் அவசர உத்தரவு
By DHUSHI
காலி தேசிய வைத்தியசாலையின் இரண்டு நடமாடும் குளிரூட்டிகளில் வைக்கப்பட்டிருந்த 84 ஈரானிய கடற்படையினரின் சடலங்களை, ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவை காலி பிரதம நீதவான் சமீர தொடங்கொட இன்று(11.03.2026) காலி தேசிய வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவு
காலி துறைமுகப் பொலிஸாரால் காலி பிரதம நீதவான் நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
