அச்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்தாரா அநுர..! கேள்வி எழுப்பும் சாணக்கியன்

Batticaloa Ilankai Tamil Arasu Kachchi Anura Kumara Dissanayaka Shanakiyan Rasamanickam Budget 2025
By Rakshana MA Apr 17, 2025 09:51 AM GMT
Rakshana MA

Rakshana MA

2025ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டத்தில் மட்டக்களப்பு(Batticaloa) மாவட்ட அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதி வெறுமனே 51 மில்லியன் மாத்திரமே.

ஏன் அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அபகரித்து விடுவார் என்ற பயத்தினாலா குறைந்த நிதி ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றார் என மட்டக்களப்பு மாவட்ட தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன்(Shanakiyan) கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "ஊழல் மோசடிகளற்ற ஆட்சியை நடத்திய மாநகரசபை ஆட்சியாக எமது கட்சியின் ஆட்சியே.

கடந்த காலங்களிலே எமது ஆட்சியில் சட்டவிரோதமான வேலைகளை செய்து தர கேட்டுக்கொண்டவர்கள் இன்று வேறு சின்னங்களில் கேட்கின்றார்கள்.

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

அஸ்வெசும கொடுப்பனவு பெறுபவர்களுக்கு ஜனாதிபதியின் அறிவிப்பு

அச்சத்தில் நிதி ஒதுக்கீடு

இலங்கை தமிழரசு கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் சங்கு சின்னத்திற்கு வாக்குகள் கிடைக்காது என்பதற்காக மட்டக்களப்பு மாநகரசபைத் தேர்தலில் சங்கு சின்னத்தில் போட்டியிட தைரியமில்லாமல் வேறு வேறு சின்னங்களில் போட்டி போடுகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இம்முறை ஜனாதிபதியால் அபிவிருத்திக்கு ஒதுக்கிய நிதி வெறுமனே 51 மில்லியன் மாத்திரமே.

அச்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்தாரா அநுர..! கேள்வி எழுப்பும் சாணக்கியன் | Budget 2025 Funds For Batticaloa Shanakiyan Ques

ஏன் அவரது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு அபகரித்து விடுவார் என்ற பயத்தினாலா குறைந்த நிதி ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றார்?

கிழக்கு மாகாணத்திற்கு இலங்கை அரசாங்கத்தினால் அபிவிருத்திக்கு நிதி ஒதுக்கவில்லை.

இந்தியாவின் ஒதுக்கீட்டின் மூலமே அபிவிருத்தி செய்யப் போவதாக ஜனாதிபதியே சொல்லி இருந்தார்.

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

கிழக்கு மாகாண ஆட்சி..

கடந்த நாடாளுமன்றத்திலே மட்டக்களப்பு மாவட்டம் மாத்திரம் தமிழரசுக் கட்சியை வெற்றிபெறச் செய்தது.

இந்த உள்ளூராட்சியில் வடக்கு - கிழக்கு தமிழர் தாயகம் முழுவதும் தமிழரசுடன் இருக்கின்றது என்ற செய்தியை நாங்கள் இந்த அரசுக்குச் சொல்ல வேண்டும். எமது பிரதேசங்ளைப் பற்றி தெரிந்தவர்களே இந்தப் பிரதேசத்தை ஆட்சி செய்ய வேண்டும்.

அச்சத்தில் நிதி ஒதுக்கீடு செய்தாரா அநுர..! கேள்வி எழுப்பும் சாணக்கியன் | Budget 2025 Funds For Batticaloa Shanakiyan Ques

தென்னிலங்லையில் இருந்து வந்து அநுரகுமார இங்கு ஆட்சி செய்ய வேண்டியதில்லை. அவருடன் இணைந்திருக்கும் புல்லுருவிகள் ஆட்சி செய்ய முடியாது” என குறிப்பிட்டுள்ளார். 

மஹியங்கனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான உண்மைகள்

மஹியங்கனை துப்பாக்கிச் சூடு தொடர்பில் வெளியான உண்மைகள்

போர் நிறுத்தத்தை நிராகரிக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் தீவிரமடையும் நிலவரம்

போர் நிறுத்தத்தை நிராகரிக்கும் ஹமாஸ்! மத்திய கிழக்கில் தீவிரமடையும் நிலவரம்

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW