மட்டக்களப்பில் திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன்

Batticaloa Sri Lankan Peoples Eastern Province Accident Death
By Rakshana MA Apr 19, 2025 06:20 AM GMT
Rakshana MA

Rakshana MA

மட்டக்களப்பில் (Batticaloa) திருமணமான 9 நாட்களிலே விபத்தில் சிக்கி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

சந்திவெளி பிரதான வீதியிலுள்ள சந்தைக்கு முன்பாக நேற்று (18) மாலை இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு தேவையான மாதவருமானத்தின் உண்மை நிலை!

இலங்கையில் குடும்பம் ஒன்றுக்கு தேவையான மாதவருமானத்தின் உண்மை நிலை!

மணமகன் பலி

உயிரிழந்தவர் சந்திவெளியைச் சேர்ந்த 27 வயதான வடிவேல் மோகன சாந்தன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

மற்றுமொருவர் படுகாயம் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பில் திருமணமான 9 நாளில் விபத்தில் பலியான மணமகன் | Accident In Batticaloa Man Dead

சந்திவெளியில் நேற்று நடைபெறவிருந்த கரப்பந்தாட்ட நிகழ்வில் கலந்து கொள்வோருக்காக உணவினை பெற்றுக்கொள்ள சென்ற போது விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரணையை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

அம்பாறையில் மின்னல் தாக்கி நபரொருவர் மரணம்

அம்பாறையில் மின்னல் தாக்கி நபரொருவர் மரணம்

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

வெளிநாட்டில் இருந்து பணம் அனுப்புவோருக்கு அறிவித்தல்

            நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW   


GalleryGalleryGalleryGallery