40 ரூபாவால் அதிகரித்த தேங்காயின் விலை!

Sri Lankan Peoples Economy of Sri Lanka Coconut price
By Rakshana MA Jan 25, 2025 08:40 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாட்டிற்கு காரணம், மக்கள் தொகை அதிகரிப்புடன் கடந்த 20 ஆண்டுகளில் தேங்காய் உற்பத்தி குறைந்து வருவதே, என ருஹுனு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.

மேலும், கடந்த வருடத்தின் இறுதியில் 160 ரூபாவில் இருந்து சடுதியாக 40 ரூபாவால் தேங்காயின் விலை அதிகரித்து 200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அதிரடியாக கைது

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அதிரடியாக கைது

மக்கள் தொகை 

2000 ஆம் ஆண்டளவில், தேங்காய் உற்பத்தி 3,000 மில்லியன் தேங்காய்களாக இருந்ததாகவும், அப்போது நாட்டின் மக்கள் தொகை 18 மில்லியனாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.

40 ரூபாவால் அதிகரித்த தேங்காயின் விலை! | The Price Of Coconut Increased By Rs 40

இருப்பினும், 2024 ஆம் ஆண்டுக்குள் நாட்டின் மக்கள் தொகை 23 மில்லியனாக அதிகரித்திருந்தாலும், தேங்காய் உற்பத்தி அதிகரிக்கவில்லை என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

தேங்காய் பற்றாக்குறை தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு தேங்காய் உற்பத்தி இல்லாததே தேங்காய் பற்றாக்குறைக்கு முக்கிய காரணியாக உள்ளது என்று பேராசிரியர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில், தேங்காய் பற்றாக்குறைக்கு நீண்டகால தீர்வாக இந்த ஆண்டு 3 மில்லியன் தென்னை மரக்கன்றுகளை நடுவதற்கு தென்னை பயிர்ச்செய்கை சபை தீர்மானித்துள்ளது.

பாடசாலை ஆய்வகத்தில் வெடிப்பு சம்பவம்: பல மாணவர்கள் காயம்

பாடசாலை ஆய்வகத்தில் வெடிப்பு சம்பவம்: பல மாணவர்கள் காயம்

தேங்காயின் சில்லறை விலை

இருப்பினும், 2024 ஆம் ஆண்டின் இறுதியில், ஒரு தேங்காயின் சில்லறை விலை 160 லிருந்து 200 ரூபாவாக உயர்ந்துள்ளது. தற்போது வெளியிடப்பட்ட தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டில் தேங்காய் உற்பத்தி சுமார் 700 மில்லியன் தேங்காய்களால் குறைந்துள்ளது.

40 ரூபாவால் அதிகரித்த தேங்காயின் விலை! | The Price Of Coconut Increased By Rs 40

முக்கிய காரணிகள் கடந்த நான்கு ஆண்டுகளில் வருடாந்த தேங்காய் உற்பத்தி 2020 இல் 2792 மில்லியன் தேங்காய்களாகவும், 2021 இல் 3120 மில்லியன் தேங்காய்களாகவும், 2022 இல் 3391 மில்லியன் தேங்காய்களாகவும், 2023 இல் 2682 மில்லியன் தேங்காய்களாகவும் பதிவாகியுள்ளன.

தேங்காய் விளைச்சல் குறைவதற்கு பல முக்கிய காரணிகள் பங்களித்துள்ளன.

இதில் குறைக்கப்பட்ட உர பயன்பாடு, காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதம், வானிலை மாற்றங்கள் மற்றும் சமீபத்தில் தென்னை பயிர்ச்செய்கை நிலங்களை பிற திட்டங்களுக்கு விற்பனை செய்தல் ஆகியவை அடங்கும்.

மீள் மதிப்பீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

மீள் மதிப்பீடு தொடர்பில் பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

புலமைப் பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்

புலமைப் பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW