புலமைப் பரிசில் பரீட்சையில் வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாவட்டத்தில் முதலிடம்

Ministry of Education Sri Lanka
By Independent Writer Jan 24, 2025 12:24 PM GMT
Independent Writer

Independent Writer

தற்போது வெளியாகியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையில் கல்குடா கல்வி வலயத்திற்குட்பட்ட வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மட்டக்களப்பு மாவட்டத்தில் வரலாற்று சாதனை படைத்துள்ளது.

வாழைச்சேனை இந்து கனிஷ்ட பாடசாலை மாணவி ஜோர்ச் ரோஷலினா 180 புள்ளிகளைப் பெற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் முதலாம் இடத்தினை பெற்று பாடசாலைக்கும் பாடசாலை சமூகத்திற்கும், கல்குடா வலயத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்.

அத்தோடு பாடசாலையில் வெட்டு புள்ளிகளுக்கு மேல் புள்ளிகளைப் பெற்று 26 மாணவர்கள் சித்தி பெற்றுள்ளனர்.

எனவே சித்திபெற்ற மாணவர்களுக்கும் கல்வி கற்பித்த ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் பாடசாலை சார்பாக நன்றியையும் வாழ்த்துகளையும் பாடசாலை பிரதி அதிபர் திருமதி.வனித்தா தியாகராஜா தெரிவித்தார்

Gallery