பாடசாலை ஆய்வகத்தில் வெடிப்பு சம்பவம்: பல மாணவர்கள் காயம்
Sri Lanka Police
Colombo
Sri Lankan Schools
School Children
By Laksi
3 months ago

Laksi
நீர்கொழும்பில் உள்ள ஒரு தனியார் பாடசாலையில் ஏற்பட்ட வெடிப்பு சம்பவத்தில் 12 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
7 வகுப்பு மாணவர்கள் குழு பாடசாலை ஆய்வகத்தில் பரிசோதனை செய்து கொண்டிருந்தபோது இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தநிலையில், காயமடைந்த மாணவர்கள் நீர்கொழும்பு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கட்டான பொலிஸார் தெரிவித்தனர்.
விசாரணைகள்
இந்த ஆய்வகத்தில் நடத்தப்பட்ட பரிசோதனையின் போது வெடிப்பு ஏற்பட்டதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெடிப்பு இடம்பெற்ற நேரத்தில், சம்பந்தப்பட்ட ஆசிரியர் ஆய்வகத்தை விட்டு வெளியேறியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
இந்த அனர்த்தத்தில் 7 சிறுவர்களும் 5 சிறுமிகளும் காயமடைந்தனர். சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |