மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அதிரடியாக கைது

Sri Lanka Police Sri Lanka Politician Sri Lankan Peoples Yoshitha Rajapaksa
By Rakshana MA Jan 25, 2025 04:50 AM GMT
Rakshana MA

Rakshana MA

புதிய இணைப்பு

கைது செய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், யோஷிதவிடம் இருந்து வாக்குமூலம் பெற்ற பின்னர் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

34 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான காணி ஒன்றை வாங்கியமை தொடர்பாக யோஷிதவை சந்தேக நபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாகவே இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான தகவல் - கடுமையாகும் சட்டம்

தொலைபேசி பாவனையாளர்களுக்கு வெளியான தகவல் - கடுமையாகும் சட்டம்

யோஷித ராஜபக்ச கைது

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச அதிரடியாக கைது | Yoshida Rajapaksa Arrested 2025

பெலியத்த பகுதியில் வைத்து இன்று(25) அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

சட்டவிரோத சொத்து குவிப்பு தொடர்பில் யோஷித ராஜபக்ச குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் புத்திக மனதுங்க குறிப்பிட்டுள்ளார். 

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு

நிந்தவூர் ஆதார வைத்தியசாலை முன்பாக பொதுமக்களால் போராட்டம் முன்னெடுப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW