நாட்டில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Badulla Sri Lanka Hospitals in Sri Lanka
By Laksi Jul 25, 2024 11:47 AM GMT
Laksi

Laksi

மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் பதுளை போதனா வைத்தியசாலைக்கு வருகை தரும் சிறுவர்கள், இளைஞர் மற்றும் யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தகவலை பதுளை (Badulla) வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப்பிரிவின் சிரேஷ்ட வைத்தியர் பாலித ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

இது குறித்து வைத்தியர் கருத்து தெரிவிக்கையில், மனநல நோய்க்குரிய அறிகுறிகளுடன் நாளாந்தம் 4 முதல் 5 சிறுவர்களும் மற்றும் 3 முதல் 4 இளைஞர் அத்தோடு யுவதிகளும் வைத்தியசாலைக்கு வருகை தருகின்றனர்.

மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை கைது

நோய் அறிகுறிகள்

மயக்கம், வேகமாகச் சுவாசித்தல், நெஞ்சு வலி, கை கால் மரத்துப் போதல், கை கால் விரல்கள் இழுத்தல், சுவாசிப்பதற்குச் சிரமம் ஏற்படல், அதிகமாக வியர்வை வெளியேறுதல் மற்றும் தூக்கமின்மை உள்ளிட்டவை மனநல நோய்க்குரிய அறிகுறிகளாகும்.

நாட்டில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Symptom Mental Illness Warning Sl Children Youth

இந்த நோய்த்தாக்கமானது  'Panic Attack' என அழைக்கப்படுகின்றது.

தேர்தல்கள் ஆணைக்குழுவால் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிக்கை

தேர்தல்கள் ஆணைக்குழுவால் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிக்கை

உடனடியாக சிகிச்சை 

அதிகளவான அச்சம், வாழ்க்கை தொடர்பான அச்சம், சமாளிக்க முடியாத சூழ்நிலைகள் தொடர்பான அச்சம் காரணமாக இந்த Panic Attack' ஏற்படலாம்.

நாட்டில் சிறுவர்களிடையே அதிகரிக்கும் நோய்த்தாக்கம் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Symptom Mental Illness Warning Sl Children Youth

எனவே, இத்தகைய நோய் அறிகுறிகள் காணப்படுபவர்கள் உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு சிரேஷ்ட வைத்தியர் பாலித ராஜபக்ச அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேர்முகப் பரீட்சைக்கு சென்ற இளைஞன் தொடருந்தில் மோதி உயிரிழப்பு

நேர்முகப் பரீட்சைக்கு சென்ற இளைஞன் தொடருந்தில் மோதி உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW