தேர்தல்கள் ஆணைக்குழுவால் சற்றுமுன் வெளியிடப்பட்ட அறிக்கை
புதிய இணைப்பு
ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளையதினம் வெளியிடப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதற்கான உத்தியோகபூர்வ அறிக்கையை ஆணைக்குழு சற்றுமுன்னர் வெளியிட்டுள்ளது.
இதன்படி 1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதி தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனம் நாளை வெளியிடப்படும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
குறித்த அறிக்கையில், '1981 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஜனாதிபதித் தேர்தல்கள் சட்டத்தின் சட்ட ஏற்பாடுகளுக்கமைய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான பிரகடனத்தை வெளியிடும் திகதியும், பெயர்குறித்த நியமனங்களை ஏற்கும் திகதியும் பற்றி அறிவிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலை 2024 ஜூலை மாதம் 26 ஆம் திகதி வெளியிடுவதற்கு இன்றைய தினம் கூடிய தேர்தல் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது என்பதை இத்தால் அறிவிக்கின்றேன்.
அதேபோல், ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியும், ஏனைய நியதிச்சட்ட ஏற்பாடுகளும் பற்றி தனிப்பட்ட பலரும் பல திறத்தவர்களும் முன்வைக்கும் கருத்து வெளிப்பாடுகள் சம்பந்தமாக தேர்தல் ஆணைக்குழு எவ்வித பொறுப்பையும் ஏற்காது என்பது இத்தால் மேலும் அறிவிக்கப்படுகின்றது” என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
எதிர்வரும் வாரம் ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அத்தோடு, அடுத்த வாரம் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் திகதியை நாடு நிச்சயமாக அறிய முடியும் எனவும் தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க (R.M.A.L.Ratnayake) தெரிவித்துள்ளார்.
மேலும், ஜனாதிபதித் தேர்தலை நடத்துவது தொடர்பான ஆரம்பகட்ட பேச்சுவார்த்தைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான திகதி
இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தல் திகதி வெள்ளிக்கிழமை (26ீ) ஆம் திகதிக்கு முன்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் முன்னர் குறிப்பிட்டிருந்தார்.
இதேவேளை, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டால் இரண்டு தேர்தல்களையும் ஒரே நேரத்தில் வெவ்வேறு தினங்களில் நடத்தக் கூடிய ஆற்றல் தேர்தல் ஆணைக்குழுவிற்கு உண்டு என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |