பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு

Sri Lanka Nalin Fernando
By Mayuri Jul 25, 2024 05:05 AM GMT

பாண் விலை குறைப்பு தொடர்பான தீர்மானம் நாளை அறிவிக்கவுள்ளதாக அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே.ஜயவர்தன தெரிவித்துள்ளார். 

பாண் விலை குறைப்பு தொடர்பில் நேற்று விசேட கலந்துரையாடல் இடம்பெற்றுள்ள போதும் பாண் விலை குறைப்பு தொடர்பில் இறுதி இணக்கப்பாட்டுக்கு வர முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார்.

கட்டுப்பாட்டு விலை

பாணின் விலையை குறைக்க உற்பத்தியாளர்கள் நடவடிக்கை எடுக்காவிட்டால் அதற்கான கட்டுப்பாட்டு விலை அறிவிக்கப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்திருந்தார்.

பாண் விலை குறைப்பு தொடர்பில் நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு | Bread Price Today In Sri Lanka

இதன்படி, பாண் உள்ளிட்ட வெதுப்பக பொருட்களின் விலைகளை குறைப்பது குறித்து வெதுப்பக உற்பத்தியாளர்களின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW