மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை கைது
கரந்தெனிய பிரதேசத்தில் மூன்று வயது குழந்தையை கொடூரமாக தாக்கிய தந்தை ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (24) மேற்கொள்ளப்பட்டுள்ளதாக எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதன்போது, அதே பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடைய இளைஞரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையை தாக்கிய தந்தை
தாக்குதலுக்குள்ளான குழந்தையின் தாயார் தொழில் நிமித்தம் வெளிநாடு சென்றிருந்த நிலையில், சந்தேகநபரும், குழந்தையும் வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், குழந்தை தந்தையிடம் சாப்பாடு கேட்ட போது குழந்தையை கடுமையான வார்த்தைகளால் திட்டி, குழந்தையின் கால் ஒன்றை துவிச்சக்கரவண்டியின் முன் சக்கரத்தின் கீழ் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலதிக விசாரணை
இதனையடுத்து, குழந்தையை கொடூரமாக தாக்கும் காணொளிகளை வெளிநாட்டில் உள்ள தாய்க்கு சந்தேகநபர் அனுப்பி வைத்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
குறித்த காணொளி சமூக வலைதளங்களில் பரவி வருவதை அவதானித்துள்ளதாகவும் இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் எல்பிட்டிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |