நேர்முகப் பரீட்சைக்கு சென்ற இளைஞன் தொடருந்தில் மோதி உயிரிழப்பு

Colombo Sri Lanka Sri Lanka Police Investigation
By Laksi Jul 25, 2024 07:02 AM GMT

பாணந்துறை - எலுவில பிரதேசத்தில் தொடருந்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் எலுவில பிரதேசத்தில் வசிக்கும் 22 வயதான கவிது ஹசரேல் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறை! முதற்கட்ட மதிப்பீடு ஆரம்பம்

சாரதி அனுமதிப்பத்திரத்தை கருப்புப் பட்டியலில் இடும் முறை! முதற்கட்ட மதிப்பீடு ஆரம்பம்

பொலிஸார் விசாரணை

குறித்த இளைஞன் நேர்முகப் பரீட்சை ஒன்றில் கலந்து கொள்வதாக தந்தையுடன் சென்ற போது பாணந்துறையிலிருந்து மருதானை நோக்கிச் சென்ற தொடருந்தில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேர்முகப் பரீட்சைக்கு சென்ற இளைஞன் தொடருந்தில் மோதி உயிரிழப்பு | Young Man Going An Interview Hit Train And Killed

இந்தநிலையில், சடலம் பிரேத பரிசோதனைக்காக பாணந்துறை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், சம்பவம் தொடர்பில் பாணந்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கான நியமனம் தொடர்பில் வெளியான தகவல்

பதில் பொலிஸ் மா அதிபர் பதவிக்கான நியமனம் தொடர்பில் வெளியான தகவல்

பிரதமர் பதவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும்! நாமல்

பிரதமர் பதவி ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு வழங்கப்பட வேண்டும்! நாமல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW