இலங்கையில் அறிமுகமாகும் ஒன்லைன் விசா முறை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை

Sri Lanka Airport M A Sumanthiran Sri Lanka Sri Lanka visa Dollars
By Laksi Jul 26, 2024 06:21 AM GMT
Laksi

Laksi

ஒன்லைன் விசா வழங்கும் திட்டம் தொடர்பில் விமான நிலையத்தில் உருவாக்கப்படவுள்ள புதிய முறையானது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சம்பிக்க ரணவக்க, ரவுப் ஹக்கீம் மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உச்ச நீதிமன்றில் அடிப்படை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளனர்.

இந்த விசா முறைமையினால் நாட்டின் முக்கிய தகவல்கள் கசியும் அபாயம் காணப்படுவதாகவும், இது தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளனர்.

வரையறுக்கப்படும் கடவுச்சீட்டு வழங்கல்

வரையறுக்கப்படும் கடவுச்சீட்டு வழங்கல்

ஒன்லைன் விசா

தனிப்பட்ட ரீதியில் இந்த மனுக்களை குறித்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்கல் செய்துள்ளதுடன் குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர், சுற்றுலாத்துறை அமைச்சர், சட்ட மா அதிபர் மற்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் இந்த மனுவின் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.  

இலங்கையில் அறிமுகமாகும் ஒன்லைன் விசா முறை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sri Lanka Tourist Visa Through Online System

ஒன்லைன் விசா குறித்த கொடுக்கல் வாங்கல் மத்திய வங்கி மோசடியை விடவும் நூறு மடங்கு பாரியளவிலானது என நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, ஒரு சுற்றுலாப் பயணியிடம் 25 டொலர் அறவீடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு

100 டொலர்

இதேவேளை, வெளிநாட்டு பிரஜைகள், இரட்டைக் குடியுரிமையுடைய இலங்கைப் பிரஜைகள் ஒன்லைன் விசா பெற்றுக்கொள்ள 100 டொலர்களை செலுத்த வேண்டியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க கூறியுள்ளார்.

இலங்கையில் அறிமுகமாகும் ஒன்லைன் விசா முறை: விடுக்கப்பட்ட எச்சரிக்கை | Sri Lanka Tourist Visa Through Online System

பிரபல நிறுவனமொன்றின் பெயரில் இந்த கொடுக்கல் வாங்கல் மேற்கொள்ளப்படும் நிலையில் உண்மையில் அந்த நிறுவனம் தொழில்நுட்ப உதவிகளை மட்டுமே வழங்குகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், சிறு நிறுவனமொன்று பாரியளவில் இந்த விசா முறையினால் இலாபமீட்டுவதாகவும்  சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி அறிவிப்பு

ஜனாதிபதித் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தும் திகதி அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW