பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவிப்பு
Sri Lanka
Sri Lankan Peoples
Transport Fares In Sri Lanka
Economy of Sri Lanka
By Laksi
பேருந்து நிறுவனங்கள் தொடர் வருமான இழப்பு காரணமாக பயண அட்டை வழங்கும் முறைக்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அத்தோடு, தமது வருமானத்தைப் பாதுகாக்க பயண அட்டைகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தகவலை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
பயண அட்டை
இது குறித்து ஷஷி வெல்கம கருத்து தெரிவிக்கையில், பயணிகளிடம் இருந்து அறவிடப்படும் சட்டவிரோத கட்டணங்கள் குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதனை தடுக்க பயண அட்டை மூலம் பணம் செலுத்துவதே ஒரே தீர்வாகும்.
மேலும், போக்குவரத்து அமைச்சு இது தொடர்பான டெண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளதாக ஷஷி வெல்கம தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |