மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப்போராட்டம்

Batticaloa Parliament of Sri Lanka Sri Lanka Politician Sri Lankan Peoples Gnanamuththu Srineshan
By Rakshana MA Jan 11, 2025 01:40 PM GMT
Rakshana MA

Rakshana MA

கடந்த ஆட்சிக்காலத்தில் படுகொலையாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்களை ஏன் விடுதலை செய்யக்கூடாது என மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் கேள்வியெழுப்பினார்.

இதனடிப்படையில், தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்கக்கோரி வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் கையெழுத்துப்போராட்டம் இன்றைய தினம்(11) கிழக்கு மாகாணத்தில்  மட்டக்களப்பு பிரதான பஸ்நிலையத்தில் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, போராளிகள் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் வடகிழக்கில் முன்னெடுக்கப்பட்டு வரும் இந்த போராட்டமானது தற்போது கிழக்கின் மட்டக்களப்பில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தங்கத்தின் இன்றைய நிலவரம்! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் இன்றைய நிலவரம்! விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

போராட்டத்தின் நோக்கம் 

மேலும், பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளையும், புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்ட பின்பும் மீண்டும் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள போராளிகளையும், புதிய அரசாங்கம் விடுவிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப்போராட்டம் | Signature Protest In Batticaloa 2025

இந்த போராட்டத்தின் போது பெருமளவான மக்கள் மழை என பாராது வருகை தந்து கைளெழுத்திட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த போராட்டம் தொடர்பில் கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்,

பல ஆண்டுகளாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்ற, எமது விடுதலைக்காக போராடிய தமிழ் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற அறவழிப்போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றனர்.

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

கச்சா எண்ணெய்யின் விலையில் திடீர் மாற்றம்

மனிதாபிமானத்திற்கு எதிரான சட்டம் 

பயங்கரவாத தடைச்சட்டம் என்னும் பெயரில் மிக மோசமானதும் மனிதகுலத்திற்கு எதிரான சட்டம் இலங்கையில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. இதன் மூலம் அப்பாவிகளை கூட பயங்கரவாதிகள் என்ற பார்வைக்குட்படுத்தப்படும் மிக மோசமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப்போராட்டம் | Signature Protest In Batticaloa 2025

தற்போது ஆட்சிக்குவந்த அரசாங்கம் இந்த சட்டத்தினை நீக்குவோம் என்னும் உத்தரவாதத்தினையளித்தும் கூட இன்னும் அந்த பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படவில்லை.

இந்த நிலையில் இந்த கொடிய பயங்கரவாத சட்டத்தின் கீழ் எமது பத்து தமிழ் அரசியல் கைதிகள் தொடர்ந்து தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள்.

இவர்கள் விரைவாக விடுதலைசெய்யப்படவேண்டும். இவர்கள் நீண்டகாலமாக சிறைச்சாலையில் கழித்துவிட்டார்கள். மீதமிருக்கும் காலத்திலாவது தமது உறவுகளுடன் இணைந்துவாழ்வதற்கு மாற்றத்தினை உருவாக்கப்போவதாக கூறும் புதிய அரசாங்கம் அதனை செய்யவேண்டும்.

போலி ஓட்டுநர் உரிம மோசடி : மூவர் கைது

போலி ஓட்டுநர் உரிம மோசடி : மூவர் கைது

புதிய ஜனாதிபதியிடம் வேண்டுகோள் 

மேலும், நாங்கள் ஜனாதிபதியை சந்தித்த போது இந்த தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தோம். சட்டமா அதிபருடன் பேசி தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை செய்வோம் என்று ஜனாதிபதி எம்மிடம் கூறியிருந்தார்.

இதன்படி, தாமதப்படுத்தாமல் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதன் மூலம் நீங்கள் பாரபட்சமற்றவர்கள், இனவாதிகள் அல்ல என்பதை நிரூபிக்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளீர்கள்.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப்போராட்டம் | Signature Protest In Batticaloa 2025

அத்துடன் இந்த கையெழுத்துப்போராட்டம் என்பது எந்தவித வன்முறை சார்ந்த விடயமும் அல்ல. அகிம்சை வழிசார்ந்த ஜனநாயக வழிப்போராட்டமாகும். தமிழ் அரசியல் கைதிகள் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடியவர்கள், தமிழர்களின் உரிமைக்காக போராடியவர்கள். ஆகவே, அந்த கைதிகளை அரசாங்கம் விடுதலைசெய்யவேண்டும்.

கடந்தகாலத்தில் மிகமோசமான கொலைக்குற்றவாளிகள் கூட பொதுமன்னிப்பின் அடிப்படையில் கடந்தகால அரசுகள் விடுதலை செய்திருந்தது.

ஏன் விடுதலைக்காக போராடியவர்களை விடுதலைசெய்யக்கூடாது என்பதை கேட்கவிரும்புகின்றோம்.

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் அதிரடியாக கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் அதிரடியாக கைது: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

விடுதலைக்கான கோரிக்கை 

தற்போதுள்ள தேசிய மக்கள் சக்தி கூட ஒரு காலத்தில் புரட்சிகரமான மாற்றம் ஒன்றினை ஏற்படுத்துவதற்காக ஆயுதம் ஏந்தி போராடியவர்கள். அவர்களுக்கு தமிழர்களின் விடுதலைப்போராட்டத்தினை விளங்கிக்கொள்ள அதிக நாட்கள் தேவையில்லை.

ஆகவே, தமது சமத்துவ உரிமைக்காக போராடிய தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்து அவர்களின் குடும்பங்களுடன் இணைந்து வாழ்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன் என அவர் கருத்து தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் முன்னெடுக்கப்பட்ட கையெழுத்துப்போராட்டம் | Signature Protest In Batticaloa 2025

மேலும், இந்த போராட்டத்தில் போராளிகள் நலன்புரி சங்கத்தின் வவுனியா மாவட்ட இணைப்பாளர் இ.செல்வநாதன் தலைமையில் நடைபெற்றதுடன் இந்த போராட்டத்தில் மட்டக்கப்பு மாவட்ட இலங்கை தமிழரசுக்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், தமிழ் தேசி மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ், மாவட்ட அமைப்பாளர் குககுமார், சிவில் சமூக செயற்பாட்டாளர் எஸ்.சிவயோகநாதன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்

சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஞானசார தேரர்

90 வகையான மருந்துகளின் விலை குறைப்பு : முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை

90 வகையான மருந்துகளின் விலை குறைப்பு : முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery