போலி ஓட்டுநர் உரிம மோசடி : மூவர் கைது
போலி ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவு ஆவணங்களை தயாரித்து விநியோகிக்கும் மோசடியில் ஈடுபட்ட மூன்று சந்தேக நபர்கள் பொலன்னறுவை(Polonnaruwa) பகுதியில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நேற்று(10) நடத்தப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும் இதில் கைது செய்யப்பட்ட பிரதான சந்தேக நபர், மனம்பிட்டி பகுதியைச் சேர்ந்த 48 வயதானவர் எனவும் மேலும் அவரிடம் இருந்து 19 போலி ஓட்டுநர் உரிமங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலதிக விசாரணை
அத்துடன் பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் போது போலி ஓட்டுநர் உரிமங்கள் மற்றும் வாகனப் பதிவு ஆவணங்களை தயாரிப்பதில் அவர் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதன் அடிப்படையில், தொடர்ந்தும் மேற்கொண்ட விசாரணையின் படி, இந்த மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் மேலும் இரண்டு சந்தேக நபர்களை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
குறித்த கைது செய்யப்பட்ட இருவர் தொடர்பிலும் குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் தெரிவிக்கையில்,
பொரலஸ்கமுவவைச் சேர்ந்த 39 வயதுடைய ஒரு சந்தேக நபர், வெரஹெராவில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு (DMT) அருகில் ஒரு ஓட்டுநர் பள்ளியை நடத்தி வந்துள்ளதுடன், இரண்டாவது சந்தேக நபரான நாரஹென்பிட்டியைச் சேர்ந்த 60 வயதுடைய மற்றொருவர், நாரஹென்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் துறைக்கு அருகில் போலி உரிமங்களைத் தயாரிப்பதில் ஈடுபட்டுயள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
மோசடி
மேலும், இந்த நடவடிக்கையின் போது, அதிகாரிகள் மூன்று போலி ஓட்டுநர் உரிமங்கள், ஆறு மொபைல் போன்கள், ஒரு கணினி மற்றும் மோசடி நடவடிக்கைகளில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்படும் பல ஆவணங்களை பறிமுதல் செய்துள்ளனர்.
அத்துடன் விசாரணைகள் தொடர்வதால், சந்தேக நபர்கள் தற்போது மனம்பிட்டி பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
மேலும், பொலன்னறுவை பகுதி குற்றப் புலனாய்வுப் பிரிவு மற்றும் மனம்பிட்டி பொலிஸார் இந்த வழக்கு தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |