90 வகையான மருந்துகளின் விலை குறைப்பு : முன்னெடுக்கவுள்ள நடவடிக்கை
90 வகையான மருந்துகளின் விலைகளை குறைப்பதற்கான நடவடிக்கைகளை ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை திட்டமிட்டுள்ளது.
இந்த நிலையில் மருந்துகளின் விலைகளை குறைப்பதற்காக சில மருந்து நிறுவனங்கள் மாவட்ட நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கிற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாக அதிகார சபையின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
மருந்துகளின் விலை
தொடரந்தும் இது தொடர்பில் அந்த உயர் அதிகாரி தெரிவிக்கையில்,
இதற்கமைய, நகர்த்தல் பத்திரம் ஊடாக விடயங்களை முன்வைக்கவுள்ளது.
அதன்பின்னர் மருந்துகளின் விலைகளை குறைக்கும் நடவடிக்கையை விரைவில் முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
HMPV நோயாளிகள்
இந்நிலையில் சுகாதார துறை அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ(Nalinda Jeyatissa) கூறுகையில்,
இலங்கையில் HMPV நோயாளிகள் எவரும் இதுவரை கண்டறியப்படவில்லை.
இந்த நிலையில், HMPV வைரஸ் தொற்று தொடர்பில் சுகாதார அமைச்சு விழிப்புடன் இருப்பதாகவும், நாட்டில் வைரஸால் பாதிக்கப்பட்ட எவரேனும் கண்டறியப்பட்டால் மக்களுக்குத் தெரியப்படுத்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.
அத்துடன், நோயெதிர்ப்பு தொடர்பான விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் நீலிகா மாலவிகே சில காலத்திற்கு முன்பு இலங்கையில் HMPV நோயாளிகள் கண்டறியப்பட்டதாகக் கூறியதை சில ஊடகங்கள் தவறாக மேற்கோள் காட்டியதாகவும், முக்கியமான பிரச்சினைகளை அறிக்கையிடும் போது பொறுப்புடன் செயல்படுமாறு ஊடகங்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |