சமூக ஊடகங்கள் மூலம் நிதி மோசடி: பொதுமக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
வட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெறும் இணையவழி நிதி மோசடிகள் குறித்து பொதுமக்கள் பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு தெரியப்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில். dir.ccid@police.gov.lk என்ற ஊடாக பொலிஸ் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு மின்னஞ்சல்களை அனுப்பி முறைப்பாடுகளை பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிதி மோசடி
முகப்புத்தகம் மற்றும் வட்ஸ்அப் போன்ற சமூக ஊடக கணக்குகளை ஹேக் செய்வதன் மூலம் பொதுமக்கள் நிதி மோசடிக்குள்ளாவதாக பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் , தொலைபேசிகளுக்கு வரும் தேவையற்ற இணைப்புகளை திறக்கவோ அல்லது OTP குறியீடுகள் அல்லது குறுஞ்செய்திகள் (SMS) மற்றும் வாட்ஸ்அப் செய்திகள் மூலம் அனுப்பப்படும் நிதி உதவிக்கான கோரிக்கைகளுக்கு பதிலளிக்கவோ வேண்டாம் என்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |