பொதுத் தேர்தல் தொடர்பில் 1938 முறைப்பாடுகள் பதிவு

Election Commission of Sri Lanka Crime General Election 2024
By Laksi Nov 07, 2024 09:30 AM GMT
Laksi

Laksi

பொதுத் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கை 1938 ஆக அதிகரித்துள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கடந்த 24 மணி நேரத்தில் 144 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், தேர்தல் குறித்த வன்முறை சம்பவம் 1 பதிவாகியுள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதன்படி, தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 455 முறைப்பாடுகளும் மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 1483 முறைப்பாடுகளும் 35 ஏனைய முறைப்பாடுகளும் கிடைத்துள்ளன.

அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களில் மாற்றம்: வெளியான தகவல்

அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களில் மாற்றம்: வெளியான தகவல்

முறைப்பாடுகள் 

தேர்தல் சட்டத்தை மீறியமை தொடர்பான முறைப்பாடுகளே இதுவரை அதிகமாக கிடைக்கப்பெற்றுள்ளதுடன், இதுவரை 19 வன்முறைச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

பொதுத் தேர்தல் தொடர்பில் 1938 முறைப்பாடுகள் பதிவு | General Election 1938 Complaints Registered

மேலும், இதுவரையான முறைப்பாடுகளில் 1603 முறைப்பாடுகளுக்கான தீர்வுகள் கண்டறியப்பட்ட நிலையில், 3335 முறைப்பாடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை

திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW