அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களில் மாற்றம்: வெளியான தகவல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Ceylon Electricity Board Water
By Laksi Nov 07, 2024 07:10 AM GMT
Laksi

Laksi

நாட்டில் பல அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்கள் குறைக்கப்படும் என தேசிய மக்கள் கட்சியின் காலி மாவட்ட வேட்பாளர் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

அத்தோடு,  எரிபொருள், மின்சாரம், நீர் போன்றவற்றுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அதற்கான கலந்துரையாடல்கள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காலியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

கட்டண அதிகரிப்பு

அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது எரிபொருள், மின்சாரம், தண்ணீர் போன்றவற்றுக்கு அறவிடப்படும் கட்டணம் மிக அதிகமாக இருப்பதுடன் இதனால் சுமார் ஒரு லட்சத்து அறுபதாயிரம் சிறு மற்றும் நடுத்தர விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்தியாவசிய சேவைகளின் கட்டணங்களில் மாற்றம்: வெளியான தகவல் | Fees Of Many Essential Services Will Be Reduced

இதேவேளை, ஒரு இலட்சம் ரூபாவிற்கு மேல் வருமானம் ஈட்டும் நபர்களுக்கு வருமானம் ஈட்டும் போது விதிக்கப்படும் வரி இரண்டு இலட்சம் என்ற வரம்பிற்கு கொண்டு வரப்படும் எனவும் ரத்ன கமகே தெரிவித்துள்ளார்.

பிரித்தானிய உயர்ஸ்தானிகரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி

பிரித்தானிய உயர்ஸ்தானிகரால் அரசாங்கத்திற்கு வழங்கப்பட்டுள்ள உறுதிமொழி

டொனால்ட் ட்ரம்புக்கு ரணிலின் வாழ்த்துச் செய்தி

டொனால்ட் ட்ரம்புக்கு ரணிலின் வாழ்த்துச் செய்தி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW