தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள்

Sri Lanka Politician Sri Lanka Sri Lankan Peoples Sri Lanka Presidential Election 2024 Parliament Election 2024
By Rakshana MA Nov 07, 2024 05:44 AM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கான பிரசார நடவடிக்கைகள் நவம்பர் 11ஆம் திகதி நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நவம்பர் 11 நள்ளிரவு முதல் அமைதி காலம் தொடங்கும் என எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தல் தொடர்பான பிரசார நடவடிக்கைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க கருத்து வெளியிட்டுள்ளார்.

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள நிலையில் இன்னும் 5 நாட்களில் தேர்தல் வேட்பாளர்கள் அனைவரும் பிரசாரங்களை நிறைவுக்கு கொண்டு வர வேண்டும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக களமிறங்கும் இலங்கை விமானப்படை

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக களமிறங்கும் இலங்கை விமானப்படை

வாக்களிப்பு

அத்துடன் வீடு வீடாகச் செல்வது சட்டவிரோதமான செயல் எனவும் வேட்பாளர்களின் குடும்பத்தினரை வாக்களிக்க கோரும் நடவடிக்கைகளும் முடிவுக்கு வரும் எனவும் சமன் ஸ்ரீ ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

 தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு இன்றும் (07) நாளையும் (08) அளிக்க வாய்ப்புக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்தல் ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் | Election Commission Restrictions Imposed In Sl

ஒக்டோபர் 30, நவம்பர் 1 மற்றும் 4ஆம் திகதிகளில் முப்படை முகாம்கள் மற்றும் ஏனைய அனைத்து அரச நிறுவனங்களிலும் தபால் மூல வாக்குகளை செலுத்தாத வாக்காளர்களுக்கு இச்சந்தர்ப்பம் கொடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான வாக்குகளை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகளை மாவட்ட செயலாளர் காரியாலயத்தில் மேற்கொள்ள முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மதகுருமார்கள், அவர்களின் மத நடவடிக்கைகளை பிரசாரத்திற்கு பயன்படுத்தக் கூடாது மற்றும் வேட்பாளர்கள் பிரித் நூல் கட்டுவதை புகைப்படம் எடுத்து பிரசாரம் செய்ய கூடாது எனவும் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் ஆபத்து அதிகரிப்பு

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் டெங்கு நோயின் ஆபத்து அதிகரிப்பு

சவூதி அரசாங்க ஏற்பாட்டில் மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டி

சவூதி அரசாங்க ஏற்பாட்டில் மாபெரும் அல்குர்ஆன் மனனப்போட்டி

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW