ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக களமிறங்கும் இலங்கை விமானப்படை

Bandaranaike International Airport Sri Lanka South Africa Sri Lanka Air Force
By Rakshana MA Nov 06, 2024 01:43 PM GMT
Rakshana MA

Rakshana MA

ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் பணிக்காக புறப்படவுள்ள இலங்கை விமானப்படை வீரர்களின் வெளியேற்று அணிவகுப்பு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நடைபெற்றுள்ளது.

மத்திய ஆபிரிக்க குடியரசில் ஐ. நா அமைதி காக்கும் பணிகளுக்காக இன்று (06) விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ச அவர்களின் தலைமையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த அமைதிப் பணிக்காக செல்லும் வீரர்களின் அணிவகுப்பு கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் பெருமிதத்துடன் இடம்பெற்றுள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

ஐ. நாவுக்கான அமைதிப்படை

இவ் அமைதி காக்கும் பணிக்காக புறப்படவுள்ள விமானப் படையானது இலங்கையிலிருந்து செல்லும் 10ஆவது குழுவாகும். இதில் 20 அதிகாரிகளும் 88 படைவீரர்களும் பணிக்காக செல்லவுள்ளனர் என கூறப்பட்டுள்ளது.

இலங்கை விமானப்படை கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டதன் மூலம் சுமார் 130 மில்லியன் அமெரிக்க டொலர்களை திறைசேரிக்கு வழங்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் பணிக்காக களமிறங்கும் இலங்கை விமானப்படை | Sri Lankan Air Force Deploys For Un Peacekeeping

மேலும், குறித்த அமைதி காக்கும் பணி மாத்திரமன்றி மத்திய ஆபிரிக்க குடியரசில் போர் நடவடிக்கைகளுக்கு பங்களித்தல், துருப்பு போக்குவரத்து, வி.ஐ.பி போக்குவரத்து, உணவு மற்றும் சரக்கு போக்குவரத்து, உள் விமானங்கள், பாராசூட் தரையிறக்கம், மருத்துவ போக்குவரத்துக்கு போன்றவற்றிலும் இப்படை வீரர்கள் பங்களிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பணிப்பாளர் நாயகத்தின் சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி

சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை பணிப்பாளர் நாயகத்தின் சேவைக் காலத்தை நீடிக்க அமைச்சரவை அனுமதி

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW