திருமணத்திற்கான தாயின் பரிசு - பெண்கள் அறிய வேண்டியவை
ஜாஹிலியா காலக்கட்டத்திலிருந்து மரண சாசனம் (وصية) என்பது நன்கு அறியப்பட்ட நற்கட்டளை மொழி.
இவ்வாறாக, உமாமா பின்த் ஹாரிஸின் பத்து கட்டளைகள், கினாதா குலத்தின் புகழ்பெற்ற இளைஞனை திருமணம் செய்து கொள்ள, அவள் அன்புடன் வளர்த்த தனது மகளை அனுப்பியபோது, கொடுக்கப்பட்ட கட்டளைகள் இலக்கியத்தில் அறியப்பட்டவையே.
கலைநயம் மற்றும் அழகான மரியாதைக்குரிய மொழியில் குறிப்பிடத்தக்க ஆழ்ந்த அர்த்தங்கள் மற்றும் சட்டங்களையும் வெளிப்படுத்தும் உருக்கமான அக்கட்டளைகளிலிருந்து திருமணம் என்னும் பந்தத்தில் இணையக்கூடிய அனைத்து மணமகளுக்கும் நன்னடத்தையுடன் வாழவும், லாபம் ஈட்டவும், வாழ்க்கையை பொக்கிஷமாக மாற்றவும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.
ஏனெனில் அவை மிகவும் அழகான கட்டளைகள், சிறந்த வாழ்க்கை. அதிர்ஷ்டம் மற்றும் சிறந்த நல்லொழுக்கங்கள் நிறைந்த கட்டளைகள் ஆகும்".
என் அன்பு நிறைந்த அருமை மகளே!நல்ல குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணாகவோ அல்லது ஒழுக்கமான பெண்ணாகவோ இருந்தேன் என்பதற்காக புத்திசாலித்தனத்தின் ஞான படிப்பினைகள் கைவிடப்பட்டிக்கும் என்றால், உங்கள் நலனுக்காக நான் அதை கைவிட்டிருப்பேன். நான் அதை உங்களுக்கும் சொல்லியிருக்க மாட்டேன், நான் அதை மறைத்து வைத்திருப்பேன்.
எவ்வாறாயினும், அவை கவனமாக இருக்கும் நபர்களுக்கு ஒரு ஆலோசனையாகவும், ஆர்வமுள்ள நபர்களுக்கு ஒரு கையேடாகவும் இருக்கும். !
என் இனிய இளம்பெண்ணே!
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆத்ம துணையின் தேவை இல்லாதிருந்தால், அவளுக்கு ஒருபோதும் ஒரு கணவன் தேவைப்பட்டிருக்க முடியாது, எனவே அவளுடைய குடும்பத்தினரின் கவனிப்பு போதுமானதாக இருக்கும், மேலும் அவர்கள் அவளை இறுதி வரை நம்பகத்தன்மையுடன் தழுவுவார்கள்.
பெண் என்றபோதிலும் அவள் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டவள். ஆண்கள் பெண்களுக்காக உருவாக்கப்பட்டவர்கள்!
என் இனிய இளம்பெண்ணே! நீங்கள் ஒரு வயதில் இதுவரை வளர்ந்த வீட்டை விட்டு, ஒரு புதிய பழக்கமில்லாத உங்கள் துணையுடன், எந்த முன்னறிவிப்பும் இல்லாத ஒரு வீட்டிற்குள் செல்வீர்கள்!
பெண் என்றபோதிலும் அவள் ஆண்களுக்காக உருவாக்கப்பட்டவள். ஆண்கள் பெண்களுக்காக உருவாக்கப்பட்டவர்கள்!
பழக்கமில்லாத துணை
நீங்கள் ஒரு வயதில் இதுவரை வளர்ந்த வீட்டை விட்டு, ஒரு புதிய பழக்கமில்லாத உங்கள் துணையுடன், எந்த முன்னறிவிப்பும் இல்லாத ஒரு வீட்டிற்குள் செல்வீர்கள்!
அவர் உங்களை மணந்து கொண்டதால் உங்கள் ஆட்சியாளராக அவரே இருப்பார்.
நீங்கள் அவரது பணிகளை செய்யும் அவரின் ராணியாக இருந்தால், அவர் உங்கள் ராஜாவாக இருப்பார்!
நான் உங்களுக்கு பத்து கட்டளைகளைச் சொல்லிக் கொடுக்கின்றேன். நீங்கள் அவற்றுக்கு முகம் கொடுக்க நேர்ந்தால் பேணி நடங்கள், அது உங்கள் வாழ்க்கைக்கு ஒரு படியாக இருப்பதோடு உங்கள் வாழ்க்கை முறையையும் அழகாக வைத்திருக்கும் !
கட்டளை
நீங்கள் அவருடன் போதுமென்ற மனதுடன் சேர்ந்து வாழ வேண்டும்!
ஏனென்றால் போதுமென்ற மனது தான் ஆத்மதிருப்தியை கொண்டது!
கட்டளை
அவருடைய கண்கள் எப்போது உங்களைப் பார்க்கின்றன என்று கவனித்துக் கொள்ளுங்கள்!
நீங்கள் ஒரு மோசமான சூழ்நிலையில் இருக்கும் நிலையில், அவர் உங்களைப் பார்க்க கூடாது!
கட்டளை
அவரது மூக்கு உங்களைத் நுகரும் போது கவனமாக இருங்கள்! உங்களிடமிருந்து அவர் விரும்பும் வாசனையை மட்டுமே அவர் உட்கொள்ளட்டும்!
கட்டளை
“நாங்கள் கேட்டோம், நாங்கள் கட்டுப்பட்டோம்” என்று அவருடன் மென்னையான முறையில் தொடர்பு கொள்ள எங்களுக்கு விருப்பம் இருக்க வேண்டும்!
ஏனெனில், நீங்கள் கேட்டு கட்டுப்பட்டு நடப்பதால் இறைவன் திருப்தியடைகிறான்!
கட்டளை
ஓய்வெடுக்கும்போது கவனமாக இருங்கள்! தூக்கமின்மை சோர்வடைவதால் வெறுப்பை கொண்டுவரும்!
கட்டளை
சாப்பிடும் போது கவனமாக இருங்கள்! ஏனெனில் பசி சீற்றத்தைத் தூண்டக்கூடியது!
கட்டளை
அவருக்கும் அவரது அன்புக்குரியவர்களுடனும் அனுசரித்து கவனமாக இருங்கள்!
முன்னுதாரணமான குடும்பத் தலைவிக்கு நல்ல வரவேற்பும் உபசரிப்பும் ஒரு சிறந்த பண்பாகும்!
கட்டளை
அவரது வீட்டைக் கவனமாக கையாளவும், அவரது சொத்துக்களைப் பாதுகாக்கவும்!
சிறந்த கவனிப்பும் சிறந்த பாதுகாப்பும் ஒரு முன்மாதிரி இல்லத்தரசியின் அறிகுறிகளாகும்!
கட்டளை
அவருடைய கட்டளைகளை மீறாமல் இருக்க முயற்சி செய்யுங்கள்!
நீங்கள் அவருடைய கட்டளையை எதிர்ப்பதால், அவரின் உள்ளத்தில் உங்கள் மீதான மனக்கசப்பினை உண்டாக்கிவிடும்!
கட்டளை
அவரது மர்மங்களை வெளிக்கொணர முயற்சிக்காதீர்கள்!
ஏனெனில், நீங்கள் மர்மங்களை வெளிக்கொணர்ந்தால், அவரது சதித்திட்டங்களின் நோக்கமாக நீங்கள் மாறக்கூடும்!
நினைவில் வையுங்கள்
அவர் மனக்குழப்பங்களோடு இருக்கும் போது நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முயற்சிக்காதீர்கள்!
இது பொறுப்பு இல்லாத செயல் என்பதால்!
இரண்டாவது அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் என்றால், நீ துயரப்படாமல் இருக்க முயற்சியுங்கள்.
இது தொந்தரவு தரும் வெளிப்பாடு என்பதால்!
உங்களால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு அவரைக் உயர்வான எண்ணங்களுடன் மதியுங்கள்! அவர் உங்களை முடிந்தவரை மிகவும் உயர்வாக மதித்து நடப்பார்!
நீங்கள் அவருடன் இருகப்பற்றி இருக்கும் போதெல்லாம் அவர் உங்களுடன் உங்களுக்காக இருப்பார்.
பெண்களே தெரிந்துகொள்ளுங்கள்
உங்கள் மீது உள்ள அவரது ஆசையில் நீங்கள் கவனம் செலுத்தாத வரை, உங்களுடையதை விட அவரது விருப்பங்களை நிறைவேற்றத்தில் கவனம் செலுத்தாத வரை, நீங்கள் எவ்வளவு ஆசைப்பட்டாலும் அவரிடமிருந்து இறுக்கமான பாசத்தையும் அன்பையும் பெற முடியாது!!
உங்கள் விருப்பத்தேர்வுகள், அவருடைய விருப்பங்களின் பொறுத்தத்தில் தான் தங்கியுள்ளது! இறைவன் உங்களுக்கு அருள் புரிவானாக...! அவர் உங்களைப் பாதுகாப்பார்! "
பின்னர் அவர் அங்கு ஒரு மணப்பெண்ணாக அனுப்பப்பட்டாள், அங்கு அவள் எல்லோரின் மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய பெண்ணாக மாறினாள். யெமன் நாட்டினை தொடர்ந்து ஆட்சி செய்து நிர்வகித்து வந்த ஏழு அரச வாரிசுகளின் பெருமைக்குரிய தாயாகவும் அவர் வரலாற்றில் தடம் பதித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |