உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என்ற போர்வையில் பணம் வசூலிக்கும் மோசடிக் குழுக்கள்

Sri Lanka Sri Lankan Peoples Inland Revenue Department
By Harrish Aug 24, 2024 09:19 PM GMT
Harrish

Harrish

 உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் எனும் போர்வையில் சில மோசடிக் குழுக்கள் வர்த்தக நிலையங்களுக்குச் சென்று வரிப் பணத்தை வசூலிப்பதாகத் தொடர்ச்சியாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன என்று உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு, பாணந்துறை, நீர்கொழும்பு, வென்னப்புவ, மினுவாங்கொடை ஆகிய பகுதிகளில் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன என்று திணைக்களத்தின் மத்திய குழு குறிப்பிட்டுள்ளது.

பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடியுள்ள ரணில்

பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடியுள்ள ரணில்

வரிப்பணம்

உள்நாட்டு இறைவரி திணைக்களத்தால் நிர்வகிக்கப்படும் வரி வகைகள் தொடர்பான வரிப்பணத்தை அரச வங்கிகளில் உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தின் பெயரில் பராமரிக்கப்படும் கணக்குகளில் மாத்திரம் வைப்பிலிடுமாறு உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் வரி செலுத்துவோரை அறிவுறுத்துகின்றனர்.

இந்நிலையில்,மாறாக பணம் அல்லது காசோலைகள் எதுவும் வசூலிக்கப்பட மாட்டாது என்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் என்ற போர்வையில் பணம் வசூலிக்கும் மோசடிக் குழுக்கள் | Scam Groups Collecting Money

இதனைக் கவனத்தில்கொண்டு செயற்படுமாறும் குற்றவாளிகளைச் சட்டத்தின் முன் நிறுத்துமாறும் உள்நாட்டு இறைவரித் திணைக்களம் மக்களை அறிவுறுத்தியுள்ளது.

அத்தகைய மோசடிக்காரர்களிடம் சிக்கியிருந்தால் அருகிலுள்ள பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்குமாறும் உள்நாட்டு இறைவரி திணைக்களம் மக்களை கோரியுள்ளது. 

சட்டவிரோதமாக எரிபொருளை ஏற்றிச்சென்ற கப்பலை கைப்பற்றிய ஈரானிய புரட்சிப் படை

சட்டவிரோதமாக எரிபொருளை ஏற்றிச்சென்ற கப்பலை கைப்பற்றிய ஈரானிய புரட்சிப் படை

மட்டக்களப்பில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட ரணிலின் ஆசிரியர்

மட்டக்களப்பில் தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்ட ரணிலின் ஆசிரியர்