பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடியுள்ள ரணில்

Ranil Wickremesinghe Pakistan World
By Laksi Aug 15, 2024 05:32 AM GMT
Laksi

Laksi

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பங்களாதேஷின் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் மொஹமட் யூனுஸை தொலைபேசியில் அழைத்து கலந்துரையாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

அத்தோடு, ரணில் மொஹமட் யூனுஸை வாழ்த்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, பங்களாதேஷில் சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு இடைக்கால அரசாங்கத்தின் தலைவரால் முடியும் என தாம் நம்புவதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

சஜித்தை ஆதரித்தது ஏன்..! ரிஷாட் பதியுதீன் விளக்கம்

ஜனாதிபதியிடம் கோரிக்கை

பங்களாதேஷில் உள்ள இலங்கை முதலீட்டாளர்களை அங்கேயே தொடர்ந்து தங்கி முதலீட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தாம் அறிவித்துள்ளதாகவும் ஜனாதிபதி, மொஹமட் யூனுஸிடம் தெரிவித்துள்ளார்.

பங்களாதேஷ் இடைக்கால தலைவருடன் உரையாடியுள்ள ரணில் | Ranil Talks With Bangladesh Interim Leader

பங்களாதேஷ் பொருளாதார ரீதியில் அபிவிருத்தியடைய இலங்கை சகல உதவிகளையும் வழங்கும் எனவும் அவர் உறுதியளித்துள்ளார்.

இதற்கு பங்களாதேஷ் இடைக்கால தலைவர், ஜனாதிபதியின் வாழ்த்துக்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, விரைவில் பங்களாதேஷுக்கு வந்து நாட்டை மீட்டெடுக்க தேவையான வழிகாட்டுதலை வழங்குமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சில அமைச்சுக்கள்

ஜனாதிபதியின் கீழ் கொண்டுவரப்பட்ட சில அமைச்சுக்கள்

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு:ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு:ரிஷாட் பதியுதீன் அறிவிப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW