சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா?

Saudi Arabia Palestine Israel-Hamas War Gaza
By Rakshana MA Aug 13, 2025 09:46 AM GMT
Rakshana MA

Rakshana MA

Courtesy: எம்.என்.எம்.யஸீர் அறபாத்

பலஸ்தீனம் (Palestine) மீது இஸ்ரேல் நடத்தி வரும் ஆக்கிரமிப்பு மற்றும் தாக்குதல்களுக்கு எதிராக உலகளவில் எதிர்ப்பு அதிகரித்து வரும் நிலையில், சவூதி அரேபியா தலைமையிலான அரபு உலகம் இரு தேச தீர்வு (Two-State Solution) திட்டத்தை மீண்டும் முன்வைத்துள்ளது.

இந்த யோசனை 2002 இல் சவூதி முன்வைத்த அரபு சமாதான முன்மொழிவு (Arab Peace Initiative) அடிப்படையில் அமைந்தது.

இதில், 1967 எல்லைக்குள் கிழக்கு ஜெரூசலேமை தலைநகராகக் கொண்டு சுயாட்சி பலஸ்தீன நாடு உருவாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தப்படுகிறது.

கிண்ணியா அமைப்பாளர்களின் தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த பலன்!

கிண்ணியா அமைப்பாளர்களின் தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த பலன்!

பல நாடுகள் ஆதரவு

சவூதி பட்டத்து இளவரசர் முகம்மது பின் சல்மான் உட்பட உயர் மட்ட அதிகாரிகள், பலஸ்தீன மற்றும் இஸ்ரேல் தரப்புகளுடனும், ஐரோப்பிய நாடுகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா? | Saudi Push For Two State Solution

இந்த திட்டத்திற்கு ஐ.நா., ஐரோப்பிய யூனியன், ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், எகிப்து, ஜோர்டான் உள்ளிட்ட பல நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

இஸ்ரேல், ஹமாஸ் ஆயுதங்களை ஒப்படைக்க வேண்டும், காசா பாதுகாப்பு வலயமாக இருக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகள் காரணமாக இந்த திட்டத்தை ஏற்கவில்லை.

ஹமாஸ், சில சமரசங்களை முன்வைத்தாலும், இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகள் மற்றும் கடுமையான நிபந்தனைகள் காரணமாக தீர்வுக்குத் தயங்குகிறது.

சிறையிலிருந்து கொண்டு போதைப்பொருள் வியாபாரம்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்

சிறையிலிருந்து கொண்டு போதைப்பொருள் வியாபாரம்: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிஸார்

இரு தேச தீர்வு முயற்சி

பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸ் தலைமையிலான PLO அமைப்பு, 1967 எல்லைகளை அடிப்படையாகக் கொண்டு இரு தேச தீர்வை ஆதரிக்கிறது.

சவூதியின் இரு தேச தீர்வு முயற்சி : நம்பிக்கையா? ஏமாற்றமா? | Saudi Push For Two State Solution

மேற்குலகத்தின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகங்கள் நிலவினாலும், பல நாடுகள் சவூதியின் முன்முயற்சியை வரவேற்கின்றன.

சவூதி, பலஸ்தீனத்திற்கு நீதியை வழங்குவது தமது மதப்பொறுப்பு மற்றும் சமாதானக் கடமையென வலியுறுத்துகிறது.

1967 எல்லைக்குள் கிழக்கு ஜெரூசலத்தை தலைநகராகக் கொண்டு சுயாட்சி பலஸ்தீன அரசு உருவாக்கப்படுதல் மட்டுமே நீடித்த அமைதிக்கான வழி என சவூதி அறிவித்துள்ளது.

விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ள அசாத் மௌலானா

விரைவில் இலங்கைக்கு வருகை தரவுள்ள அசாத் மௌலானா

திருமலையிலுள்ள சட்ட விரோதமான கட்டடத்தை அகற்ற எச்சரிக்கை!

திருமலையிலுள்ள சட்ட விரோதமான கட்டடத்தை அகற்ற எச்சரிக்கை!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW