கிண்ணியா அமைப்பாளர்களின் தொடர்ச்சியான முயற்சிக்கு கிடைத்த பலன்!
கிண்ணியாவில் (Kinniya) இவ்வாண்டுக்கான PSDG வேலைத்திட்டத்தின் கீழ், புதிய கொங்கிரீட் பாதை அமைப்பு ஆரம்பமாகியுள்ளது.
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கம், கிண்ணியா வட்டார மக்களின் நீண்டநாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், பொது மையவாடி வீதியில் ரூபா 700,000 பெறுமதியிலான கொங்கிரீட் இடும் பணிகளை இன்று (13) ஆரம்பித்தது.
இந்த திட்டமானது, உள்ளூராட்சி தேர்தலுக்கு முன்பே பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட கட்சியின் அமைப்பாளர்களின் தொடர்ச்சியான உழைப்பின் பயனாக நடைமுறைக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான முயற்சி
குறித்த இந்த திட்டத்தின் மூலம் அந்த பகுதியில் நீண்டகாலமாக காணப்பட்ட பாதை பிரச்சனை தீர்க்கப்பட்டுள்ளது.
இது குறித்து வட்டார மக்கள் அமைப்பாளர்களின் அர்ப்பணிப்பு மற்றும் முயற்சிகளை பாராட்டியதோடு, இந்த பாதை அமைப்பு பணிகள் விரைவில் பூர்த்தியடையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



