சவூதி அரேபியாவால் இலங்கை மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள கொடை
சவுதி அரேபியா(Saudi Arabia) 50 மெட்ரிக் தொன் பேரீச்சம் பழங்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ளது.
எதிர்வரும் ரமழான் மாத நோன்பு காலத்தை முன்னிட்டு இவ்வாறு பேரீச்சம் பழங்கள் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் குறித்த ரமழானை முன்னிட்டு பேரீச்சம் பழங்கள் நாட்டுக்கு கிடைத்துள்ளதாகவும் அவற்றை பள்ளிவாசல்களுக்கு விநியோகிக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முளப்பர்(Muneer Mulaffar) தெரிவித்துள்ளார்.
புனித ரமழான் மாதம்
ரமழான் மாதம் இஸ்லாமிய நாள்காட்டியில் புனித மாதங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.
இந்த மாதம் முஹம்மது நபிக்கு புனித அல்-குர்ஆன் வெளிப்படுத்தப்பட்டதை குறிப்பதுடன் தமது பாவங்களில் இருந்து பாதுகாக்கப்படுவார்கள் என்ற நம்பிக்கையுடன் முஸ்லிம் மக்கள் இந்த நோன்பை கடைபிடிக்கின்றனர்.
இந்த நிலையில், ரமழான் மாதத்தில் நோன்பு கடைபிடிப்பவர்கள் அதிகாலை முதல் மாலை வரையில், உண்ணாமல், நீரருந்தாமல் நோன்பு பிடிப்பார்கள், இதன் மூலம் தங்களின் உள்ளத்தை துய்மைப்படுத்துவதோடு இறைவனுடனான நெருக்கமும் அதிகரிக்கும்.
இவ்வாறான நோன்பு காலங்களில் நோன்பு திறக்கும் வேளையில் பேரீச்சம் பழங்கள் முக்கியமான ஒரு உணவு பொருளாக கருதப்படுகின்றமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |