காரைதீவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை விழிப்புணர்வு செயற்றிட்டம்
Sri Lanka
Sri Lankan Peoples
Kalmunai
By Rakshana MA
காரைதீவில் இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை செயற்பாடு (Enic Project) தொடர்பாக விழிப்புணர்வு கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த விழிப்புணர்வு கலந்துரையாடல் நேற்று(22) ஆட்பதிவு திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்களால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இந்த விழிப்புணர்வு செயற்றிட்டமானது, காரைதீவு பிரதேச செயலகத்தின் கீழ் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுகளின் பங்களிப்பில் இடம்பெற்றுள்ளது.
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை
மேலும், குறித்த கலந்துரையாடல் காரைதீவு பிரதேச செயலாளர் பொறியியலாளர் ஜி. அருணனின் வழிகாட்டுதல்களுக்கு அமைவாக காரைதீவு உதவி பிரதேச செயலாளர் எஸ். பார்த்திபன் அவர்களின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |