காரைதீவில் இடம்பெறவுள்ள திறமைக்கான தேடல் விழா
கலை, கலாசார, சமூக மேம்பாட்டுக்கான அமைப்பின் 28ஆவது வருட கொண்டாட்டம் எதிர்வரும் 2025 ஜனவரி 25ஆம் திகதி காரைதீவு விபுலானந்தர் ஞாபகார்த்த கலாசார மண்டபத்தில் இரண்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ளதாக அறிவிப்பாளர் ஏ.எல். அன்சார் தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வுகளின் முதல் அமர்வு பிறை எப்.எம் வானொலியின் பிரதிப் பணிப்பாளர் பஷீர் அப்துல் கையூமின் தலைமையில் காலை 10 மணி தொடக்கம் மதியம் 01.00 மணி வரை இடம்பெறவுள்ளது.
திறமைக்கான தேடல் விழா
இதில் முதன்மை விருந்தினர்களாக அம்பாறை மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், ஓய்வு பெற்ற பிறை எப்.எம் வர்த்தக முகாமையாளர் கவிஞர் எஸ்.றபீக் மற்றும் கலாபூஷணம் எம். அருணம்பலம் ஆகியோரும் கலந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வில் பல்சுவை கவியரங்கும் நடைபெறும்.
விசுவாமித்திரன் தமிழ் மருதா மாமணியின் தலைமையில் இடம்பெறும் கவியரங்கில் கவிஞர்களால் கவி இசைக்கப்படவுள்ளன.
அத்துடன், 02.30 மணிக்கு ஆரம்பமாகும் இரண்டாம் அமர்வில் மரநடுகை, பாடசாலை மாணவர்களுக்கான பாடசாலை புத்தகப்பை வழங்குதல் என்பனவற்றுடன் திறமைக்கான தேடல் மகுடத்தின் கீழ் பல்துறை சார்ந்தவர்களுக்கு திறமைக்கு மரியாதை கௌரவ விருதுகள் வழங்கப்படவுள்ளன.
மேலும், இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். உதுமாலெப்பை கலந்து கொள்ள உள்ளதுடன் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். ஜெகராஜன் கௌரவ அதிதியாகவும், விசேட விருந்தினர்களாக தினகரன் பிரதம ஆசிரியர் செந்தில் வேலவர், பார்ட்னர்ஸ் போ சேன்ஜ் இன்டெர்னஷனல் நிறுவன சிரேஷ்ட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் றிசாத் ஷெரீப் மற்றும் கலை இலக்கியவாதிகள், சமூக செயற்பாட்டாளர்கள், ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொள்ள உள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |