உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப்போட்டியிடும் அரசியல் தலைவர்

Rauf Hakeem Sri Lanka Politician Sri Lanka
By Rakshana MA Jan 22, 2025 03:00 PM GMT
Rakshana MA

Rakshana MA

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மரச் சின்னத்தில் தனித்து போட்டியிடுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்  தலைவர் ரவூப் ஹக்கீம்(Rauff Hakeem) தெரிவித்துள்ளார்.

தாருஸ்ஸலாம் தலைமையகத்தில் நேற்று(21) மாலை நடைபெற்ற கட்சியின், கொழும்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டத்தில் ஏகமனதாக இது தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு! மக்களுக்கான அறிவித்தல்

கந்தளாய் குளத்தின் வான் கதவுகள் திறப்பு! மக்களுக்கான அறிவித்தல்

தனித்து போட்டியிட தீர்மானம் 

கொழும்பு மாவட்ட மத்திய குழுக் கூட்டத்தில் தற்போதைய அரசியல் சூழ்நிலையை மையப்படுத்தி நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதன் பின்னர், கொழும்பு, தெஹிவளை - கல்கிஸ்ஸ, கோட்டே, மொரட்டுவை, கொலன்னாவ மாநகர சபைகளுக்கும், கொடிகாவத்தை - முல்லேரியா போன்ற பிரதேச சபைகளுக்கும் முஸ்லிம் காங்கிரஸ் தனித்துப் போட்டியிடும் என்ற முடிவை ரவூப் ஹக்கீம் அறிவித்ததோடு, அடுத்த கட்ட நடவடிக்கைகளை கட்சி உடனடியாக ஆரம்பிக்க உள்ளது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் தனித்துப்போட்டியிடும் அரசியல் தலைவர் | Raoob Hakeem Is Competing Alone In Tree Symbol

அத்துடன் இந்த குழுக்கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், எம்.எஸ்.உதுமாலெப்பை, எம்.எஸ்.நழீம் மற்றும் கட்சியின் கொழும்பு மாவட்ட அமைப்பாளர், முன்னாள் மேல் மாகாண சபை உறுப்பினர் அர்ஷாத் நிஸாம்தீன் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் நடைபெற்றது.

உச்சத்தை தொட்டுள்ள தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

உச்சத்தை தொட்டுள்ள தங்கத்தின் விலை : வாங்கவுள்ளோருக்கான அறிவித்தல்

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நெற்களஞ்சியசாலை : பொது மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

மட்டக்களப்பில் கைவிடப்பட்ட நெற்களஞ்சியசாலை : பொது மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGalleryGallery