அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் வெளியான தகவல்கள்

Government Employee Sri Lankan Peoples Money
By Rakshana MA Feb 23, 2025 11:10 AM GMT
Rakshana MA

Rakshana MA

அரச ஊழியர்களின் சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிக்கவுள்ளதாக தொழில் பிரதி அமைச்சர் மஹிந்த ஜயசிங்க (Mahinda Jayasinghe) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2025ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

தற்போது அரசாங்க சேவையில் கொடுப்பனவுகள் இரண்டு வழங்கப்படுகின்றன. வாழ்க்கைச் செலவு கொடுப்பனவாக 17,800 ரூபாவும், கடந்த காலங்களில் அதிகரிக்கப்பட்ட 7,500 ரூபாவும் காணப்படுகிறது.

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

அடிப்படைச் சம்பளம்

இந்த 7500 ரூபாய் என்பது 15,750 ரூபாயினுள் சம்பள அதிகரிப்பிற்கு அதிகரிக்கப்படும். அடிப்படைச் சம்பளம் 15,750 ரூபாவினால் அதிகரிக்கும் போது அங்கு காணப்படும் 7,500 ரூபாய் புதிதாக மீதப்படும் பகுதியாகும்.

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் வெளியான தகவல்கள் | Salary Increament For Gov Employees In Sri Lanka

அதனால் இந்த வருடத்தில் 5000 ரூபாவில் மீதப்படும் 3,250 ரூபாவின் 975 ரூபாவும் அதிகரிக்கப்படும். அதன்போது, அரசாங்க சேவையில் பி எல் (PL)1 தரத்தின் குறைந்த சம்பளம் 5,975 ரூபாவினால் அதிகரிக்கும்.

அதேபோல, அரசாங்க சேவையில் ஒவ்வொருவருக்கும் வருடாந்த சம்பள அதிகரிப்பு 80% வீதத்தினால் உயரும். குறைந்தது 250 ரூபாய் வருடாந்த சம்பள உயர்வு 450 ரூபாய் வரை 80% வீதத்தினால் அதிகரிக்கும்.

மட்டக்களப்பில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய மாணவி

மட்டக்களப்பில் குழந்தை பெற்று யன்னலால் வீசிய மாணவி

கிராம உத்தியோகத்தர் சேவை

மேலும், கிராம உத்தியோகத்தர் சேவையின் தற்போதைய சம்பளம் GN-1- 28,940 மூன்று ஆண்டுகளுக்குள் 56,630 ரூபாவாக அதிகரிக்கும். அதுபோல் 40,000 ரூபாய் அடிப்படை சம்பளத்திற்கு 17,500 எனப்படும் வாழ்க்கைச் செலவுப்படி அதே விதத்திலேயே சேர்க்கப்படும்.

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் வெளியான தகவல்கள் | Salary Increament For Gov Employees In Sri Lanka

அத்துடன், அவர்களின் மொத்த அதிகரிப்பு 21,690 ரூபாய் அதிலிருந்து 17,500 ரூபாய்களை கழித்தால் அவர்களது நிகர சம்பள அதிகரிப்பு 14,190 ரூபாவாகும். அதாவது இன்றைய நாள் கிராம உத்தியோகத்தர் ஒருவரின் சம்பளம் 9,257 ரூபாவினால் அதிகரிக்கும்.

வைத்தியர் ஒருவரின் சம்பளம் தற்போது மருத்துவ சேவையில் ஈடுபட்டுள்ள வைத்தியர்களின் (MO) சம்பளம் 54,250 ரூபாய். அது 91,750 ரூபாய் வரை அடிப்படைச் சம்பளத்தில் அதிகரிக்கப்படும். 

வனவள திணைக்களம் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரிக்கை முன்வைப்பு

வனவள திணைக்களம் வசமுள்ள காணிகளை விடுவிக்க கோரிக்கை முன்வைப்பு

வைத்தியர்களின் சம்பளம் 

அதன்போது அவர்களது மொத்த சம்பள அதிகரிப்பு 37,460 ரூபாவில் 7,500 ரூபாய்களை கழித்தால் 29,960 ரூபாவின் 30% சதவீதம் வழங்கப்படும்.

மொத்த அதிகரிப்பில் 7,500 ரூபாவை கழித்தால் மீதமாகும் 30% சதவீதம் இந்த வருடத்தில் ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து சகல அரச ஊழியர்களுக்கும் கிடைக்கும். அதன்போது வைத்தியர் ஒருவரின் சம்பளம் 13,988 ரூபாவினால் அதிகரிக்கும்.

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்வு தொடர்பில் வெளியான தகவல்கள் | Salary Increament For Gov Employees In Sri Lanka

தற்போது மேலதிக மணித்தியாலத்திற்கு 687 ரூபாய் வழங்கப்படுகின்றது. இந்த புதிய சம்பள அதிகரிப்பினால் புதிதாக இணைந்து கொள்ளும் மருத்துவ உத்தியோகத்தர் ஒருவருக்கு மேலதிக நேரக்கொடுப்பனவு 764 ரூபாவாகும் என்றும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்

கொடுத்த வாக்கை நிறைவேற்றிய நாடாளுமன்ற உறுப்பினர்

தமிழ் மொழியில் அமைச்சரவை முடிவுகள்

தமிழ் மொழியில் அமைச்சரவை முடிவுகள்

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW