கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் அபாயம்

Food Shortages Sri Lankan Peoples Rice
By Rakshana MA Mar 23, 2025 12:32 PM GMT
Rakshana MA

Rakshana MA

நாடு முழுவதும் சுமார் 7 மாதங்களுக்கு கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் என தேசிய விவசாயிகள் ஒன்றியத்தின் தலைவர் அனுராத தென்னகோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதனை தொடர்ந்து, அரிசி பற்றாக்குறை இந்த வருடத்தின் கடந்த மாதங்களில் அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்த 500 பேருக்கு மேற்பட்ட வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபை தெரிவித்துள்ளது.

சருமத்தை வெண்மையாக்கும் மருந்துகள் தொடர்பில் வெளியான தகவல்

சருமத்தை வெண்மையாக்கும் மருந்துகள் தொடர்பில் வெளியான தகவல்

அரிசி பற்றாக்குறை 

எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்யும் வர்த்தகர்களைத் தேடி மேற்கொள்ளும் சுற்றிவளைப்புகள் அதிகரிக்கவுள்ளதாக அந்த சபை குறிப்பிட்டுள்ளது.

கடுமையான அரிசி பற்றாக்குறை ஏற்படும் அபாயம் | Rice Shortage In Sri Lanka Next 7 Months

மேலும், பல்வேறு விலைகளில் சில போலி வர்த்தகர்களும், ஆலை உரிமையாளர்களும் அரிசி விற்பனை செய்து வருவதோடு, அரிசியை மறைத்து வைத்துள்ளமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.

பச்சை அரிசி, நாட்டரிசி, சம்பா, கீரி சம்பா அரிசி ஆகியவற்றுக்காக இப்போது உச்சபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

3 நாள் ரமழான் கொண்டாட்ட நிகழ்ச்சி

3 நாள் ரமழான் கொண்டாட்ட நிகழ்ச்சி

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பல்கலைக்கழக மாணவர்

ட்ரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்த பல்கலைக்கழக மாணவர்

        நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW