யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் : இதுவரை 7 உயிரிழப்புக்கள்

Jaffna Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka
By Rakshana MA Dec 14, 2024 04:36 AM GMT
Rakshana MA

Rakshana MA

யாழ்ப்பாண(Jaffna) மாவட்டத்தில், எலிக்காய்ச்சல் நோயினால் இதுவரையிலும் 58 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என யாழ். மாவட்ட  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியக் கலாநிதி ஆ.கேதீஸ்வரன்(A.Ketheeswaran) தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் நேற்று(13) இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு : வெளியான காரணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு : வெளியான காரணம்

பாதிக்கப்பட்டவர்களின் நிலவரம்

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், கரவெட்டி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 24 பேரும், மருதங்கேணி பிரிவில் 6 பேரும், சாவகச்சேரி பிரிவில் 4 பேருமாக இதுவரை 58 பேர் எலிக்காய்ச்சல் நோய் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

யாழில் தீவிரமடையும் எலிக்காய்ச்சல் : இதுவரை 7 உயிரிழப்புக்கள் | Rat Flue In Jaffna

அத்துடன் யாழ்ப்பாண மாவட்டத்தில் மொத்தமாக 7 இறப்புகள் பதிவாகியுள்ளன. அதில் 6 இறப்புகள் யாழ்ப்பாண மாவட்டத்திலும், ஒன்று முல்லைத்தீவு மாவட்டத்திலும் பதிவாகியுள்ளது.

மேலும், எலிக்காய்ச்சல் நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதால் இதற்கான தடுப்பு நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுத்து வருகின்றோம் என சுட்டிக்காட்டினார்.

தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW