தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

Anura Kumara Dissanayaka Sri Lanka Sri Lankan Peoples Crime National People's Power - NPP
By Laksi Dec 13, 2024 07:28 AM GMT
Laksi

Laksi

நாட்டில் மட்டுமல்ல, எமது அரசாங்கத்திலும் எவரேனும் எந்த மட்டத்திலும் தவறு செய்தால் அந்தத் தவறுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊடகப் பிரதானிகளுடன் இன்று (13) முற்பகல் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மேலும் தெரிவித்ததாவது, "ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இந்தநாட்டு மக்கள் வெவ்வேறு அரசாங்கங்களை உருவாக்கியுள்ளனர். வெவ்வேறு அரசாங்கங்களை கவித்துள்ளனர்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு : வெளியான காரணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு : வெளியான காரணம்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்

வரலாற்றில் முதன்முறையாக, இந்நாட்டு மக்கள் எமக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இரண்டு சந்தர்ப்பங்களில் வழங்கிய வரலாற்று மக்கள் ஆணையின் பொருள் மற்றும் சாரம்சம் பற்றிய விரிவான வாசிப்பை இம்முறை நாங்கள் பெற்றுள்ளோம்.

தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு | Appropriate Action Against The Wrongdoers Is Anura

தரமான மற்றும் நிலையான நாடு உருவாகும் என்ற நம்பிக்கையுடன் இந் நாட்டு மக்கள் தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தை உருவாக்கினர்.அந்த தனித்துவமான நம்பிக்கைக்கு தீங்கு விளைவிக்க எங்கள் அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது.

மட்டக்களப்பில் மனித உரிமை கல்வி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு

மட்டக்களப்பில் மனித உரிமை கல்வி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு

உரிய நடவடிக்கை

நாட்டில் தவறு செய்யும் எவரையும் எக்காரணம் கொண்டும் பாதுகாக்க எமது அரசாங்கம் தயாரில்லை.சரியான நேரத்தில் இது தொடர்பாக சாத்தியமான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க நாங்கள் தயங்க மாட்டோம்.

தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு | Appropriate Action Against The Wrongdoers Is Anura

ஏழு தசாப்தங்களாக ஏமாற்றப்பட்ட மக்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையை உறுதிப்படுத்தி இந்த நாட்டை சிறந்த நாடாக மாற்றுவதற்கு தமது அரசாங்கம் நிபந்தனையற்ற அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW