நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு : வெளியான காரணம்

Sri Lanka Sri Lankan Peoples Coconut price
By Laksi Dec 13, 2024 05:40 AM GMT
Laksi

Laksi

நாட்டில் இந்த வருடத்தின் சில மாதங்களிற்கு முன்னர் நிலவிய கடுமையான வெப்பமான வானிலையே தேங்காய் தட்டுப்பாட்டிற்கு பிரதான காரணம் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தை ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.

அத்தோடு, இந்தநாட்டில் வருடாந்தம் பயிரிடப்படும் தென்னை மரக்கன்றுகளின் எண்ணிக்கை சுமார் 70 இலட்சம் வரை குறைந்துள்ளதும் இதற்கு காரணமாக அமைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மட்டக்களப்பில் மனித உரிமை கல்வி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு

மட்டக்களப்பில் மனித உரிமை கல்வி தொடர்பான தெளிவூட்டல் செயலமர்வு

தேங்காய் தட்டுப்பாடு 

அவர் மேலும் தெரிவிக்கையில், குறுகிய காலத்திற்குள் தேங்காய் தட்டுப்பாடு ஏற்படுவதென்றால், குரங்களுகளின் எண்ணிக்கையில் உடனடி அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு : வெளியான காரணம் | Coconut Price In Sri Lanka

அப்படியொரு உடனடி அதிகரிப்பு இல்லை என்பது தெளிவாகிறது. ஆனால் இந்த விலங்குகளின் எண்ணிக்கையில் அதிகரிப்பு உள்ளது.

மார்ச் முதல் ஜூன் வரை, நாட்டில் அதிக வெப்பநிலை உயர்வு மற்றும் தேங்காய் உற்பத்தியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

தென்னை மரத்திற்கு உகந்த வெப்பநிலை 27-28 சென்டிகிரேட் வெப்பநிலையாகும். ஆனால், 33 சென்டிகிரேடுக்கு மேல் செல்லும் போது, ​​தென்னை மரங்களின் மகரந்தச் சேர்க்கை குறைந்து, காய்க்கும் தன்மை குறைகிறது.

அம்பாறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

அம்பாறை பிரதேச ஒருங்கிணைப்புக்குழு தலைவராக ஆதம்பாவா நியமனம்

தென்னை மரங்கள் நடு

 உலகிலேயே அதிக தேங்காய் பாவனையை கொண்ட நாடாக இலங்கை திகழ்வதாகவும், ஒருவர் வருடத்திற்கு 114 தேங்காய்களை உட்கொள்வதாகவும் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு : வெளியான காரணம் | Coconut Price In Sri Lanka

மேலும், எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய தேங்காய் தட்டுப்பாட்டைக் குறைப்பதற்கு மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் ருஹுனு பல்கலைக்கழகத்தின் பயிர் விஞ்ஞானப் பிரிவின் சிரேஷ்ட பேராசிரியர் அருண குமார விளக்கமளித்துள்ளார்.

குறுகிய கால நடவடிக்கையாக, விலங்குகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த வேண்டும். மேலும், தற்போதைய தென்னை விளைச்சலை அதிகரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, தென்னை மரங்கள் நடுவதை அதிகரிக்க வேண்டும் எனவும் அருண குமார வலியுறுத்தியுள்ளார்.

புத்தளத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

புத்தளத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW