புத்தளத்தில் குரங்குகளின் அட்டகாசம் அதிகரிப்பு: மக்கள் விடுத்துள்ள கோரிக்கை
புத்தளம்- வேப்பமடு மொஹிதீன் நகர் பகுதிகளில் குரங்குகளின் அட்டகாசத்தினால் பல்வேறு சிரமங்களை மேற்கொண்டு வருவதாக அந்தப்பகுதி மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
குரங்குகளின் அட்டகாசங்களினால் வீட்டின் கூரைகள் சேதமடைவதாகவும், வீடுகளில் வைக்கப்படுகின்ற பொருட்களை தூக்கிக் கொண்டு செல்வதாகவும் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
அத்தோடு ,தென்னை மரங்களில் காய்க்கின்ற குரும்பைகளை பிஞ்சிலே நாசம் செய்வதாகவும் மரங்களில் காய்க்கின்ற பழங்களை பறித்து நாசம் செய்வதாகவும் மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மக்கள் கோரிக்கை
குரங்குகளை விரட்டுவதற்கு முற்பட்டால் சீறிப் பாய்கின்றதாகவும், கடிக்க வருவதாகவும் இதனால் மக்கள் அச்சமடைகின்றதாக தெரிவிக்கின்றனர்.
குரங்குகளை விரட்டுவதற்காக பல அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதற்கான தீர்வுகள் இதுவரையிலும் கிடைக்கப்பெறவில்லையென்றும் அப்பகுதி மக்கள் கவலைத் தெரிவிக்கின்றனர்.
எனவே குரங்குகளை விரட்டுவதற்கு உரிய அதிகாரிகளினால் நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அந்தப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |