வாகனங்களின் சட்டபூர்வமான தன்மையை உறுதி செய்ய இணையத்தள சேவை அறிமுகம்
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்துவதற்காக இலங்கை சுங்கத்தினரால் இணையத்தள சேவை ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, வாகனங்களின் செஸி எண்ணை உள்ளிடுவதன் மூலம் வாகனத்தின் சட்டப்பூர்வ தன்மையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை சுங்கத்தின் பேச்சாளரும் மேலதிக பணிப்பாளர் நாயகமுமான சீவலி அருக்கொட விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இணையத்தள சேவை
நாட்டில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் புழக்கத்தை குறைப்பது மற்றும் சந்தையில் வெளிப்படைத்தன்மையை வளர்ப்பது இதன் நோக்கமாகும் என சீவலி அருக்கொட தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 2025 ஜனவரி முதல் நடைமுறையில் இருக்கும் தற்போதைய ஏல முறையை மேம்படுத்தும் வகையில் மின்னணு ஏல முறையை சுங்கத்துறை அறிமுகப்படுத்த உள்ளதாகவும், இந்த புதிய மேம்படுத்தப்பட்ட முறை ஏலத்தை மிகவும் திறமையாகவும், பாதுகாப்பாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் செய்யும் என்றும் சுங்கத்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |