ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு

Parliament of Sri Lanka SJB Srilanka Muslim Congress Rauf Hakeem Sajith Premadasa
By Laksi Dec 12, 2024 10:29 AM GMT
Laksi

Laksi

புதிய இணைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் (Samagi Jana Balawegaya) தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர்களை அந்தக் கட்சி வெளியிட்டுள்ளது.

அதன்படி, ஐக்கிய மக்கள் சக்தி சார்பாக மனோ கணேசன் (Mano Ganesan) , நிசாம் காரியப்பர் (Nizam Kariyapper), சுஜீவ சேனசிங்க (Sujeewa Senasinghe) மற்றும் மொஹமட் இஸ்மைல் ஆகியோரின் பெயர்களே தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி கட்சிக்கு 05 தேசியப்பட்டியல் ஆசனங்களைப் பெற்றுக் கொண்டிருந்த நிலையில், அதில் ஒரு ஆசனம் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டாரவுக்கு வழங்கப்பட்டிருந்தது.

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மேம்பாட்டு நிகழ்ச்சி

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மேம்பாட்டு நிகழ்ச்சி

பெயர் பட்டியல்

இதேவேளை, குறித்த தேசியப் பட்டியல் ஆசனங்களுக்கான பெயர் பட்டியலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் உள்ளடக்கப்படாமல், அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதற்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு | Prohibition Against Sjb Sajith

இந்தநிலையில், நிசாம் காரியப்பரின் பெயரை உள்ளடக்கி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஆசனங்களுக்கான பெயர் பட்டியல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்

முதலாம் இணைப்பு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு எதிராக கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தினால் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (Rauff Hakeem)  தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதிகரிக்கும் தேங்காய் விலை : நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் உற்பத்தி

அதிகரிக்கும் தேங்காய் விலை : நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் உற்பத்தி

தடை உத்தரவு

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நிசாம் காரியப்பரின் பெயர் இல்லாமல் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர்களின் வெற்றிடங்களுக்கான பெயர்களை தேர்தல் ஆணைக்குழுவுக்கு அனுப்புவதை தடுக்கும் வகையில் இந்த இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப் பட்டியல் ஆசனங்கள் அறிவிப்பு | Prohibition Against Sjb Sajith

இதேவேளை, தேசியப்பட்டியல் வழங்குவது தொடர்பான தங்களது கட்சியுடனான உடன்பாட்டை ஐக்கிய மக்கள் சக்தி நிறைவேற்றவேண்டுமெனவும், அதுவரை இடைக்காலத் தடையை விதிக்குமாறும் முஸ்லிம் காங்கிரஸ் தனது மனுவில் கேட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மீண்டும் புத்தர் சிலை: எமுந்துள்ள குற்றச்சாட்டு

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் மீண்டும் புத்தர் சிலை: எமுந்துள்ள குற்றச்சாட்டு

மூதூரில் ஐஸ் போதை பொருளுடன் குடும்பஸ்தர் கைது

மூதூரில் ஐஸ் போதை பொருளுடன் குடும்பஸ்தர் கைது

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW