அதிகரிக்கும் தேங்காய் விலை : நிறுத்தப்பட்டுள்ள எண்ணெய் உற்பத்தி
நாட்டில் தற்போது தேங்காயின் விலை அதிகரித்ததன் காரணத்தால் தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதாக அகில இலங்கை (Srilanka) பாரம்பரிய தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவத்தின் பிரதான இணைப்பாளர் புத்திக டி சில்வா(Buddhika de Silva) தெரிவித்துள்ளார்.
இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் லீட்டர் ஒன்றின் விலை 800 ரூபாவாக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
உற்பத்தி வீழ்ச்சி
மேலும், உற்பத்தி வீழ்ச்சி தொடர்பில் தென்னை பயிர்ச்செய்கை சபையின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான பதில் பிராந்திய முகாமையாளர் ஈஸ்வரன் சற்குணன் தெரிவிக்கையில்,
இரசாயன உரங்களைத் தடை செய்தமையின் காரணத்தால் தேங்காயின் உற்பத்தியில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடக சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்..
மேலும், தென்னை பயிர்ச்செய்கையின் வீழ்ச்சிக்குப் பீடைகளின் தாக்கமும் காரணமாக விளங்குவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |