மட்டக்களப்பில் கிராம உத்தியோகத்தர்களால் கசிப்பு கொள்கலன்கள் அழிப்பு
மட்டக்களப்பு (Batticaloa)- தாந்தாமலை கிராம உத்தியோகத்தர் பிரிவிலுள்ள காட்டுப் பகுதியில் விற்பனைக்கு தயாராக இருந்த சட்டவிரோத கசிப்பு கைப்பற்றப்பட்டு அவ்விடத்திலே அழிக்கப்பட்டுள்ளது.
நான்கு கிராம உத்தியோகத்தர்கள் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நேற்று (11) இந்த கசிப்பு கொள்கலன்கள் அழிக்கப்பட்டுள்ளது.
கிராம மக்கள் மூலம் தாந்தாமலையை அண்டிய கிராமப் பிரிவுகளில் கடமையாற்றும் கிராம உத்தியோகத்தர்களுக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கமைவாக, காட்டுப்பகுதியில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்டவிரோத கசிப்பு விற்பனை
இதன்போது, 12000 மில்லி லீட்டர் அடங்கிய சட்டவிரோத கசிப்பு 03 கொள்கலன்களில் இருந்து கைப்பற்றப்பட்டது.
குறித்த சம்பவத்தின் போது, சந்தேக நபர்கள் அந்த இடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கைப்பற்றப்பட்ட கசிப்பு யாவும் அந்த இடத்திலேயே அழிக்கப்பட்டுள்ளதாக கிராம உத்தியோகத்தர்கள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |