வடக்கு மாகாணத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பலியான பலர்

Sri Lanka Sri Lankan Peoples Hospitals in Sri Lanka Northern Province of Sri Lanka
By Rakshana MA Dec 12, 2024 04:47 AM GMT
Rakshana MA

Rakshana MA

வடக்கு மாகாணத்தில் மர்மக்காய்ச்சலினால் நேற்று வரையிலும் 7பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், குறித்த நோயை கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகளை விரைவுபடுத்துவதற்காக தேவையேற்படின் மாவட்டத்தின் ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவுகளிலிருந்து ஆளணியினரைப் பெற்றுப்பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ.கேதீஸ்வரனுக்கு, வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் ஆலோசனை வழங்கியுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் : கன மழைக்கான சாத்தியம்

வங்காள விரிகுடாவில் ஏற்பட்ட மாற்றம் : கன மழைக்கான சாத்தியம்

காய்ச்சலால் உயிரிழப்பு

யாழ்ப்பாண மாவட்டத்தில் 6 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒருவருமாக இதுவரை 7பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத்துறையினர் எடுத்து வரும் நடவடிக்கைகள் தொடர்பில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருடன், ஆளுநர் தொலைபேசியில் நேற்று உரையாடியுள்ளார்.

வடக்கு மாகாணத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பலியான பலர் | Fever Hits Persons In North

தொடர்ந்தும் உயிரிழப்புக்கான காரணம் இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை எனவும், மாதிரிகள் கொழும்பு மற்றும் கண்டிக்கு அனுப்பப்பட்டுள்ளன என்றும் குறிப்பிட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், எலிக்காய்ச்சலாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் வேறு வைரஸ் தொற்றுக்களாகவும் இருக்கக்கூடும் என்ற நியாயமான சந்தேகங்கள் இருப்பதாகவும் அது தொடர்பான விவரங்களையும் ஆளுநரிடம் சுட்டிக்காட்டிய அவர் இது தொடர்பில் ஆராய்வதற்காக கொழும்பிலிருந்து இரண்டு குழுக்கள் நாளையும், நாளை மறுதினமும் வருகை தரவுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

புத்தளம் இஸ்லாஹிய்யா பெண்கள் அரபுக் கல்லூரிக்கு தளபாடங்கள் வழங்கி வைப்பு

காய்ச்சலுக்கான மருந்து..

இதற்கிடையில் இந்த காய்ச்சலுக்குரிய தடுப்பு மருந்துகள் வேறு மாவட்டங்களிலிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டு விநியோக நடவடிக்கைகள் இடம்பெறுவதாகவும், அதேபோன்று ஒரு தொகுதி மருந்துக்கு கொழும்பு சுகாதார அமைச்சிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சுட்டிக்காட்டினார்.

வடக்கு மாகாணத்தில் மர்மக் காய்ச்சலுக்கு பலியான பலர் | Fever Hits Persons In North

இதேவேளை, இந்தத் தடுப்பு நடவடிக்கைகளை மருத்துவத்துறையினர் அர்ப்பணிப்புடன் மேற்கொள்ளுவதாகக் குறிப்பிட்ட ஆளுநர், மாவட்டத்தில் இந்தக் காய்ச்சலால் பாதிப்புறாத ஏனைய சுகாதார மருத்துவ அதிகாரிகள் பிரிவிலிருந்து மருத்துவ அதிகாரிகள், பொதுச்சுகாதார பரிசோதகர்களுக்கு இது தொடர்பான முழு அறிவினையும் பெற்று அவற்றை வினைத்திறனுடன் மேற்கொள்ளுமாறும் ஆலோசனை வழங்கியமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் பரிசீலனை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சாய்ந்தமருது பிரதேச உணவகங்களில் திடீர் பரிசீலனை : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

கல்முனையில் கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது

     நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW