அம்பாறையில் கவனயீர்ப்பு போராட்டம்

Ampara Sri Lanka Sri Lankan Peoples Eastern Province
By Rakshana MA Dec 12, 2024 04:18 AM GMT
Rakshana MA

Rakshana MA

சர்வதேச மனித உரிமைகள் தினத்தில் அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டமானது நேற்று(11) காலை 10.30 மணியளவில் திருக்கோவில் பகுதியில் இடம்பெற்றது.

இது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் அம்பாறை மாவட்ட தலைவி தம்பிராசா செல்வராணி தலைமையில் நடைபெற்றுள்ளது.

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

சாய்ந்தமருது பிரதேச செயலகத்தினால் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

கவனயீர்ப்பு போராட்டம்

இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளின் புகைப்படத்தை ஏந்தியவாறு அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட தாய்மார்கள் சர்வதேச மனித உரிமைகள் தினம் எதற்காக நினைவு கூறுகிறார்கள் என்று தெரியவில்லை. மனித நேயமே இல்லாத இந்த நாட்டிலே மனித உரிமைகள் தினத்தை நினைவு கூறுவதில் எவ்வித பிரயோசனமும் இல்லை என தெரிவித்தனர்.

அம்பாறையில் கவனயீர்ப்பு போராட்டம் | Demonstration In Ampara

கடந்த 15 வருட காலங்களாக காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளை மீட்க நாங்கள் வீதியில் நிற்கின்றோம்.

உலக நாடுகள் என்றாலும் சரி, சர்வதேச நாடுகள் என்றாலும் சரி, எமது நாடாக இருந்தாலும் சரி எங்களை வேடிக்கை பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

எவ்வித பிரயோசனமும் இல்லாமல் ஒவ்வொரு அம்மாக்களும் மன வேதனையுடன் உள்ளனர். இன்று நூற்றுக்கணக்கான அம்மாக்கள் உயிரிழந்துள்ளனர்.

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

மக்களின் குரல்..

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடிக் கொண்டிக்கின்றவர்கள் தற்போது குறைவானவர்களாகவே இருக்கின்றோம். இருக்கிறவர்களும் இறப்பதற்கு முன்னர் எங்களுடைய காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் உறவுகளுக்கு ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்பதற்காக நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.

மனித உரிமைகள் அமைப்புக்கள் பல இருந்தும் என்ன பலன்? என்ற கேள்வியை எழுப்பினர்.

அம்பாறையில் கவனயீர்ப்பு போராட்டம் | Demonstration In Ampara

அத்துடன் எத்தனை மனித உரிமைகள் அமைப்புக்கள் இருந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்காக அவர்களின் செயல்பாடுகள் இல்லை. எங்களுக்காக கதைப்பதற்கும் ஒருவரும் இல்லை.

இந்த நிலையிலே சர்வதேச மனித உரிமைகள் தினத்தை கருப்பு தினமாக அனுஸ்ரிக்கின்றோம் என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த போராட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னாள் எம்.பி அதாவுல்லாவினால் கொடுக்கப்பட்ட மனு

முன்னாள் எம்.பி அதாவுல்லாவினால் கொடுக்கப்பட்ட மனு

பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!!

பாடசாலைகளின் தேவைகளை நிவர்த்தி செய்யும் அஷ்ரப் தாஹிர் எம்.பி..!!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGalleryGallery