அம்பாறையில் கட்டாக்காலி மிருகங்களால் போக்குவரத்து சிரமம்: விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
அம்பாறையில் (Ampara) கட்டாக்காலி மாடுகள் மற்றும் நாய்களினால் ஏற்படும் விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து சிரமங்கள் தொடர்பில் பொதுமக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.
அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பகுதிகளான நற்பிட்டிமுனை பெரிய நீலாவணை மருதமுனை,பாண்டிருப்பு, சாய்ந்தமருது மற்றும் நகரப்பகுதிகளில் அதிகளவான கட்டாக்காலி மாடுகள், நாய்கள் உலா வருகின்றன.
இதன் காரணமாக போக்குவரத்தில் ஈடுபடும் பொதுமக்கள் வாகன சாரதிகள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக சுட்டிக்காட்டுகின்றனர்.
போக்குவரத்து நெரிசல்
இது தொடர்பில் உரிய அதிகாரிகள் கவனமெடுத்து நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
கல்முனை தலைமையக பொலிஸ் நிலையத்திற்கு முன்னுள்ள வீதியில் நாய்கள் நடமாடுவதோடு பல நாய்கள் பொலிஸ் நிலையம் செல்லும் வாசலில் வீதியில் படுத்துறங்குகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
மாலை நேரப் பொழுதில் அதிக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுவதனால் இரவுப்பொழுதினை ஒளியூட்டுவதற்காக வீதி விளக்குகள் போதியளவில் இல்லாத ஒரு துர்ப்பாக்கிய நிலையும் இங்கு காணப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கோரிக்கை
எதிர்பாராத நேரத்தில் வாகனங்களுக்கு குறுக்காக பாயும் போது நாயுடன் வாகனம் மோதிக் கொள்வதாகவும் இதனால் போக்குவரத்து அசௌகரியம் ஏற்பட்டு மனவுளைச்சலுக்கும் அச்சத்திற்கும் காரணமாகிப் போகும் சூழல் அப்பகுதியில் இருக்கின்றது.
எனவே சமூகநலன் கருதி மாநகர சபை மற்றும் பிராந்திய சுகாதார பரிசோதகர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒன்றிணைந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |