சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மேம்பாட்டு நிகழ்ச்சி

Ampara Eastern Province Sri Lankan Schools
By Laksi Dec 12, 2024 10:13 AM GMT
Laksi

Laksi

சாய்ந்தமருது கமு/கமு/லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மேம்பாட்டு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது.

பாடசாலை பிரதி அதிபர் எஸ்.எம். சுஜன், இணைப்பாடத்திட்ட உதவி அதிபர் எம்.எப்.எம்.ஆர்.ஹாதிம் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

மேலும் கெளரவ விருந்தினர்களாக கல்முனை வலயக் கல்வி அலுவலக பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எச்.எம். ரியாசா, சாய்ந்தமருது கோட்டக்கல்வி அதிகாரி ஏ. அஸ்மா மலீக், ஆங்கில பாட இணைப்பாளர் ஏ.எல்.எம். ஆரிப் ஆகியோர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக நியூ ஃபேஷன் மோட்டார்ஸின் உரிமையாளரான எம்.வை.முபாரக் கலந்து கொண்டார்.

வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்! மக்களுக்கான மகிழ்ச்சி தகவல்

வங்கி கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ள பணம்! மக்களுக்கான மகிழ்ச்சி தகவல்

மேடை நிகழ்ச்சி

இதன்போது, மாணவர்கள் தங்கள் மேடை நிகழ்ச்சிகளால் பார்வையாளர்களை கவர்ந்தது டன் அவர்களின் முயற்சிகளுக்கு பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றனர்.

சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம். அஷ்ரப் வித்தியாலயத்தில் ஆங்கில மொழி மேம்பாட்டு நிகழ்ச்சி | Sainthamaruthu Mhm Ashraff Vidyalaya English Day

 நிகழ்வின் சிறப்பம்சமாக கல்முனை கல்வி வலயம் நாடளாவிய ரீதியில் சாதாரண தர பெறுபேற்றில் 02 ஆம் இடத்தைப் பெற்றதற்காக வலயக்கல்வி பணிப்பாளர் எம்.எஸ். சஹுதுல் நஜீம் பாராட்டி கௌரவிக்கப்பட்டார். 

இந்தநிகழ்வில் பாடசாலை பகுதித் தலைவர்கள், பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் ,ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு எதிராக தடை உத்தரவு

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியலுக்கு எதிராக தடை உத்தரவு

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்

இன்றைய நாளுக்கான நாணய மாற்று விகிதம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

GalleryGalleryGalleryGalleryGallery