மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம்

Batticaloa Sri Lanka Politician Government Of Sri Lanka Hospitals in Sri Lanka
By Laksi Dec 13, 2024 08:55 AM GMT
Laksi

Laksi

 மட்டக்களப்பு (Batticaloa) தாதியர் பயிற்சிக் கல்லூரியில் புத்தர்சிலை நிறுவப்பட்டது வடக்கு மற்றும் கிழக்கினை பௌத்தமயமாக்கும் நிகழ்ச்சி நிரலின் தொடர்ச்சியாக இருக்குக் கூடாது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் (ஜனா) தெரிவித்துள்ளார்.

மேற்குறித்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் தாதியர் பயிற்சிக் கல்லூரிக்கு முன்னால் புத்தர் சிலையொன்று திடீரென்று நிறுவப்பட்டுள்ளது.

தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

தகுதி தராதரம் பாராது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி அறிவிப்பு

புத்தர் சிலை

தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் பௌத்த மதத்தைச் சேர்ந்த சிங்களவர். அதன்படி, வைத்தியசாலை நிருவாகத்திற்குத் தெரியாமல் அவர்களது அனுமதியைப் பெறாமல் ஒரு புத்தர் சிலையை வைத்திருப்பதென்பது ஏற்றுக்கொள்ளமுடியாத கண்டனத்துக்குரிய நிகழ்வாகப் பார்க்கக்கூடியதாக இருக்கிறது.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம் | Buddha Statue At Batti Hospital Request Jana Mp

இந்த நாட்டில் வடக்கு - கிழக்கு மாகாணங்களை பௌத்த மயமாக்கும் ஒரு நிகழ்ச்சி நிரல் தொடர்ச்சியாக நடைபெற்று வந்திருக்கிறது.

கடந்த அரசாங்கத்தில் கூட வட மாகாணத்தின் சுகாதாரப் பணிப்பாளராக ஒரு சிங்களவர் பௌத்த மதத்தைச் சேர்ந்தவர் நியமிக்கப்பட்ட பொழுது அவர், யாழ்ப்பாண வீதிகளில், சுற்றுவட்டங்களில் புத்தருடைய சிலையை நிறுவியதன் காரணமாக ஏற்பட்ட எதிர்ப்பின் பிரகாரம் உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படடதாக அறிந்திருக்கிறேன்.

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு : வெளியான காரணம்

நாட்டில் ஏற்பட்டுள்ள தேங்காய் தட்டுப்பாடு : வெளியான காரணம்

பௌத்த மயமாக்கும் வேலை

எனினும், புதிதாக இந்த நாட்டில் உருவாகியிருக்கின்ற அரசாங்கம் சாதி, மத, இன பேதமற்ற ஒரு இலங்கையை உருவாக்க வேண்டும் என்ற கோசத்துடன் ஆட்சியைப் பிடித்திருக்கின்றார்கள்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம் | Buddha Statue At Batti Hospital Request Jana Mp

இவர்களும் தொடர்ச்சியாக இப்படி தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் வேலையைச் செய்து கொண்டிருக்கின்றார்களா, அல்லது அரசாங்கத்திற்கு ஒரு அபகீர்த்தியை ஏற்படுத்த வேண்டும் என்ற தோரணையில் இந்த தாதியர் பயிற்சிக் கல்லூரியின் அதிபர் அவர்கள் செயற்படுகின்றாரா என்ற கேள்விக்குறி எங்கள் மத்தியில் எழுந்திருக்கின்றது.

எது எவ்வாறாயினும் வடக்கு - கிழக்குப் பிரதேசம் என்பது தமிழ், முஸ்லிம், சிங்களவர்கள் கணிசமாக வாழ்ந்து கொண்டிருந்தாலும் மட்டக்களப்பு போதனா வைத்தியாசலைக்குள் அனுமதியின்றி ஒரு புத்தர் சிலையை நிறுவியிருப்பதை எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. 

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

தமிழர்களினதும் ஆதங்கம்

வைத்தியசாலை நிர்வாகம் உடனடியாக இந்த விடயத்தில் தலையிட்டு அங்கிருக்கும் பதற்ற நிலைமையை தவிர்ப்பது மாத்திரமல்லாமல் இந்த மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இது விடயமாக கூடுதலான கரிசனையை எடுத்து அங்கு ஏற்படவிருக்கும் பதற்ற நிலையை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும்.

மட்டக்களப்பு வைத்தியசாலையில் நிறுவப்பட்டுள்ள புத்தர் சிலை: முன்னாள் எம்.பி பகிரங்கம் | Buddha Statue At Batti Hospital Request Jana Mp

இல்லாவிட்டால் தொடர்ச்சியாக இப்படியான சம்பவங்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் நடைபெறுவதற்கு ஏதுவாக அமைந்துவிடும்.

எனவே இந்த மக்கள் மீது அக்கறை கொண்டு மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உடனடியாகத் தொடர்புகொண்டு இதை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்பது என்னுடைய எண்ணம் மாத்திரமல்ல மட்டக்களப்பு போதனா வைத்தியாசலையில் பணிபுரியும் ஏனையோரினதும் தமிழர்களினதும் ஆதங்கமாக இது பார்க்கப்படுகிறது.

ஆகவே உடனடியாக மக்களினால் தெரிவு செய்யப்பட்டிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏற்பட்டிருக்கும் பதற்ற நிலையினை முடிவுக்குக் கொண்டுவரவேண்டும் என்று அவர்களை வினயமாகக் கேட்டுக் கொள்கிறேன்.” என கோ.கருணாகரம் தெரிவித்துள்ளார். 

மட்டக்களப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு

மட்டக்களப்பில் மீன்பிடி படகு கவிழ்ந்ததில் கடற்றொழிலாளர் ஒருவர் உயிரிழப்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW