ரணில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமைக்கு வெளியான காரணம்

Ranil Wickremesinghe Hospitals in Sri Lanka Prison
By Rakshana MA Aug 23, 2025 08:58 AM GMT
Rakshana MA

Rakshana MA

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (Ranil Wickramasighe), உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிகரித்த இரத்த சர்க்கரை காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் நேற்று (22) இரவு சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் விளக்கமறியல் தொடர்ந்த நிலையில், நேற்று இரவு பல அரசியல்வாதிகள் அவரைச் சந்திக்க சிறைச்சாலைக்குச் சென்றனர்.

முன்னாள் அமைச்சர்கள் துமிந்த திசாநாயக்க, பிரசன்ன ரணதுங்க, நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் உள்ளிட்டோர் ஆதரவாளர்கள் குழுவுடன் அங்கு சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா நகரத்தை அழிக்கும் முயற்சியில் ஆழமாக இருக்கும் இஸ்ரேல்..!

காசா நகரத்தை அழிக்கும் முயற்சியில் ஆழமாக இருக்கும் இஸ்ரேல்..!

வைத்தியசாலையில் அனுமதி 

ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக அவர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்படவில்லை.

ரணில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமைக்கு வெளியான காரணம் | Ranil Hospitalized In Prison Custody

இதனால், அவர்கள் சிறைச்சாலைக்கு வெளியே காத்திருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடிய வெளிநாட்டு தூதுவர்

கிழக்கு மாகாண ஆளுநருடன் கலந்துரையாடிய வெளிநாட்டு தூதுவர்

வேலைநிறுத்தத்தில் குதித்த அஞ்சல் தொழிற்சங்கங்கள்

வேலைநிறுத்தத்தில் குதித்த அஞ்சல் தொழிற்சங்கங்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW