பொலன்னறுவை மாவட்டத்தில் முன்னிலை வகிக்கும் அநுர
மெதிரிகிரிய தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் மெதிரிகிரிய தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 28,592 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 25,656 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 7,897 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,624 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 67,044 ஆகும்.
1,113 வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 65,931ஆகும்.
மேலும், 82,780 பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மின்னேரியா தேர்தல் தொகுதி
நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்தின் மின்னேரியா தேர்தல் தொகுதிக்கான முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க 34,088 வாக்குகளைப் பெற்றுள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட சஜித் பிரேமதாச 22,991 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
இதன்படி, சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 9,177 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ச 1,635 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
இந்த தேர்தல் தொகுதியில் அளிக்கப்பட்ட மொத்த வாக்குகள் எண்ணிக்கை 71,894 ஆகும்.
1,328வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில் செல்லுபடியான வாக்குகளின் எண்ணிக்கை 70,566ஆகும்.
மேலும், 89,051பேர் இந்த தொகுதியில் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தபால் மூல வாக்குகளுக்கான முடிவு
இன்றைய தினம் நடந்து முடிந்த, ஜனாதிபதி தேர்தலின் பொலன்னறுவை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்குகளுக்கான முடிவுகள் வெளியாகியுள்ளன.
இதன்படி, தேசிய மக்கள் சக்தியின் சார்பில் போட்டியிட்ட அநுர குமார திஸாநாயக்க 11,768 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 4,120 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
சுயாதீன வேட்பாளராக போட்டியிட்ட ரணில் விக்ரமசிங்க 2,762 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
பொதுஜன பெரமுன கட்சியின் வேட்பாளர் நாமல் ராஜபக்ச 188 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
திலித் ஜயவீர 56 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |